உலகம்
கடலில் நீந்திக் கொண்டிருந்த பெண்.. நொடிப்பொழுதில் கடித்து குதறிய சுறா: கடற்கரையில் நடந்த கொடூரம்!
எகிப் நாட்டில் சால் ஹசீஷ் பகுதியில் செங்கடல் என்ற பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் உள்ளது. இங்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து கடலில் மகிழ்ச்சியாகக் குளித்துச் செல்வது வழக்கம்.
மேலும் எகிப் நாட்டின் வருவாய்க்கு இந்த சுற்றுலாத்தலம் பெரிய பங்கு ஆற்றி வருகிறது. இந்நிலையில் செங்கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பேரை குறா கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த 68 வயது முதிய பெண் ஒருவர் கடலில் நீந்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சுறா ஒன்று அவரை தாக்கியது. அதனால் அவர் அலறியுள்ளார். பிறகு உடனே அந்த பெண்ணின் கை, காலை சுறா கடித்துத் துப்பியுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் ரத்த வெள்ளமாக மாறியுள்ளது. பிறகு அங்கு வந்த கடற்கரை மீட்புக் குழுவினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த கடற்கரை பகுதியில் இப்படி நடப்பது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் ருமேனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுறா கடித்து உயிரிழந்துள்ளார். மேலும் 2015,2018ம் ஆண்டில் செக்குடியரசை சேர்ந்த ஒருவரும், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவரும் சுறாவிற்கு பலியாகியுள்ளனர்.
அடுத்தடுத்து சுறா கடித்து சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்த வரும் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?