உலகம்
இனி வீடியோ காலில் முகத்தை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.. வருகிறது வாட்சப்பின் புதிய UPDATE !
நாளுக்கு நாள் தினமும் எதாவது ஒரு புதிய Update வசதியை அறிமுகப்படுத்தும் Whatsapp, சமீபத்தில் பெண்களுக்கான Period Tracker வசதி விரைவில் வரவுள்ளதாக அறிவித்தது. இதையடுத்து தற்போது Whatsapp-ல் நாம் பேசும் வீடியோ காலில் நமது முகத்திற்கு பதிலாக ஒரு பொம்மை படம் போன்ற ஒரு உருவம் இடம்பெறும் வசதி விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
பொதுவாக வாட்ஸ் அப்பில் எமோஜிக்களும், ஸ்டிக்கர்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்படி நாளுக்கு நாள் எமோஜியில் அப்டேட் கொடுத்து வரும் வாட்ஸ் அப் நிறுவனம், அண்மையில், 'அவதார்' என்கிற புதிய அப்டேட்டை ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இன்ஸ்டிராகிராமில் அறிமுகப்படுத்தியிருந்தது. 'அவதார்' என்றால் ஒரு உருவத்தை வரைகலை அனிமேஷன் வடிவில் காண்பிப்பது. இந்த வசதியை தற்போது வாட்சப்பிலும் அறிமுகப்படுத்தவுள்ளதாக வாட்ஸ் அப் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி வீடியோ காலில் பேசும்போது தனது முகத்தைக் காட்ட விரும்பாதவர்கள், இந்த அவதார் ஆப்சனை பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த ஆப்சனை கிளிக் செய்தால், கேமரா மூலம் உங்கள் முக வடிவமைப்பை கண்டறிந்து, அதற்கேற்றார் போல், ஒரு எமோஜியை ரீப்ளேஸ் செய்துவிடும். அதோடு நமது முகத்தின் அசைவையும், அது அப்படியே உள்வாங்கி திருப்பி கொடுக்கும்.
இது போன்ற சிறப்பம்சம் ஏற்கெனவே 'வாட்ஸ்அப் Beta' என்கிற ஆண்ட்ராய்டு வெர்சனில் இருந்தாலும், தற்போது IOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் சிலருக்கு பயனளித்தாலும், வாட்ஸ்அப் வீடியோ கால் என்பது முகத்தை பார்க்க தானே என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!