உலகம்

கண்டெய்னர் கதவை திறந்ததும் சரிந்து விழுந்த 46 உடல்கள்.. அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கோர சம்பவம்!

மெக்சிகோ நாட்டிலிருந்து பலர் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதனால் இருநாட்டு எல்லைகளுக்கு இடையே தீவிர கண்காணிப்புகள் உள்ளது. இருப்பினும் கண்காணிப்புகளையும் மீறி அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர்.

இப்படி சட்டவிரோதமாக அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்க டிரம்ப் அதிபராக இருந்தபோது மெக்சிகோ - அமெரிக்கா எல்லைக்கு அடையே தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற்றது.

இந்த தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. பிறகு அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்ற பிறகு எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்து 46 அகதிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கண்டெய்னர் லாரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 16 பேரையும் போலிஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சான் ஆன்டோனியா பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக் கொண்டு அந்த கண்டெய்னர் லாரி வந்திருக்கலாம் என போலிஸார் கூறுகின்றனர்.

அதோபோல் லாரி சாலையின் நின்ற உடன் அதிலிருந்த மற்றவர்கள் கீழே இறங்கித் தப்பித்து ஓடியிருக்கலாம் என்றும் போலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் 46 பேர் எப்படி இறந்தார்கள் என்பது இது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் இப்படி நடப்பது இது முதல்முறையல்ல. 2017ம் ஆண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “எதிர்காலத்தில் மனித குலத்திற்கு இயந்திரங்கள்தான் துணையாக இருக்குமா?” : ‘Finch’ படம் சொல்வது என்ன ?