உலகம்

"எங்கள் கரப்பான் பூச்சிகளை திரும்ப கொடுங்கள்".. நாசாவின் வித்தியாசமான கோரிக்கைக்கு காரணம் என்ன?

1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் நிலவுக்கு பயணம் மேற்கொண்டது.அப்போது அதில் 21.3 கிலோகிராம் நிலவு பாறை பூமிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாறை மண் மீன்கள்,சிறிய கரப்பான் பூச்சிகள் மற்றும் பிற சிறிய உயிரினங்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது. இந்த உயிரினங்களை வைத்து மண் அவற்றைக் கொல்லுமா என்று சோதிக்கப்பட்டது.

பின்னர் நிலவின் மணல்களை உண்ட கரப்பான் பூச்சிகள் மினசோட்டா பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பூச்சியியல் நிபுணர் மரியன் புரூக்ஸ் அவற்றைப் பிரித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நிலவு மண் பூச்சிகளில் வேறு ஏதேனும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறப்பட்டது.

ஆய்வின் பின்னர் அந்த கரப்பான் பூச்சிகள் மற்றும் நிலவின் மண் ஆகியவை நாசாவுக்கு அனுப்பப்படாமல் ஆய்வாளர் மரியன் புரூக்ஸின் வீட்டுக்கே கொண்டுசெல்லப்பட்டது. பிறகு புரூக்ஸின் இறப்புக்கு பிறகு கடந்த 2010ம் ஆண்டு புரூக்ஸின் மகள் இந்த கரப்பான் பூச்சிகள் மற்றும் நிலவின் மண்ணை விற்றுள்ளார்.

இந்த நிலையில் RR ஏல நிறுவனத்தின் மூலம் இந்த கரப்பான் பூச்சிகள் மற்றும் நிலவின் மண் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இந்த தகவல் அறிந்ததும் விற்பனையை நிறுத்துமாறு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா RR ஏல நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக நாசா எழுதியுள்ள கடிதத்தில், நாசாவின் பொருள்களை வைத்திருக்க எந்த நபருக்கும், பல்கலைக்கழகத்திற்கும் அல்லது பிற நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை" எனக் கூறியுள்ளது. நாசாவின் திடீர் கடிதத்தை அடுத்து ஏலத் தொகுதியிலிருந்து இந்த பொருள்கள் நீக்கப்பட்டுள்ளது.

Also Read: "இப்போ பேசுடா பார்ப்போம்"- ரசிகர்களிடம் ஆவேசமான விராட் கோலி! காரணம் என்ன?