உலகம்
அதானிக்கு எதிராக போராடும் இலங்கை மக்கள்! மோடி காரணமா? - முழு பின்னணி என்ன?
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்காக பெரும் போராட்டங்கள் நடந்து வந்தது. மேலும் இந்த தருணத்தில் இந்திய அரசு இலங்கைக்கு பல வகையில் உதவியது. மேலும் தமிழக மக்கள் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சியால் இலங்கைக்கு உதவிப் பொருள்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் இலங்கையில் அரசுக்கு எதிராக போராடி வந்த இலங்கை மக்கள் தற்போது இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபரும் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானியை எதிர்த்துப்போராடி வருகின்றனர்.
இலங்கை மக்கள் அதானியை எதிர்க்க காரணம் என்ன?
கடந்த ஆண்டு அக்டோபரில் இலங்கையின் இரண்டு இடங்களில் அதானி குழுமம் மின் உற்பத்தி செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் கையெழுத்தானது.
இது தொடர்பாக பேசிய இலங்கை மின் வாரிய தலைவர் ஃபெர்டினாண்டோ, "என்னை அழைத்த இலங்கை அதிபர், மின் திட்டங்களை அதானிக்கு ஒதுக்குங்கள் என இந்திய பிரதமர் மோடி அழுத்தம் கொடுப்பதால் திட்டத்தை அதானி குழுமத்துக்கு ஒதுக்குங்கள் எனக் கூறினார். இதனால் நான் இது தொடர்பாக நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன்" எனக் கூறினார்.
இலங்கை மின் வாரிய தலைவரின் இந்த பேச்சு இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இலங்கை வளங்களை சீனா திருடுகிறது எனகே கூறி வந்த இலங்கை மக்கள் இந்தியாவுக்கு எதிராகவும் அம்பானிக்கு எதிராகவும் போராடத் தொடங்கினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மின் வாரிய தலைவர் பதவியை ஃபெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுவும் இலங்கை மக்களை கொதித்தெழ வைத்துள்ளது. மேலும் இலங்கையில் #StopAdani என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அதானி குழுமத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்தும் ட்ரெண்ட் ஆனது. மேலும், இலங்கை சூழ்நிலையைப் பயன்படுத்தி உதவுவது போல இந்திய பிரதமர் மோடி, இலங்கை வளங்களை அதானிக்கு கொடுக்க வற்புறுத்துகிறார் போன்ற கருத்துக்களும் பரவின.
அதே போல இதற்கு முன் ஆஸ்திரேலிய நிலக்கரி ஒப்பந்தத்தை அதானிக்கு ஒதுக்கியதை கண்டு ஆஸ்திரேலியாவில் அதானி நிறுவனத்துக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அதே பாணியில் தற்போது அதானி நிறுவனத்துக்கு இலங்கையில் எதிர்ப்பு எழுவது அந்த நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!