உலகம்

அமெரிக்க இராணுவத்தின் உயர்பதவியில் மற்றொரு இந்திய பெண்.. யார் இந்த ராதா பிளம்ப்?

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகனில், சார்பு செயலர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ராதா ஐயங்கார் பிளம்ப் என்பவரை, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

தற்போது, ​​பாதுகாப்பு துணை செயலாளரின் தலைமை அதிகாரியாக இருக்கும் பிளம்ப், முன்னதாக கூகுளில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு இயக்குநராக இருந்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராதா அய்யங்கார் பிளம்ப், அமெரிக்காவில் இருக்கும் மசாசூசெட்ஸ் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

பின்னர், லண்டனில் இருக்கும் ஒரு பொருளாதார பள்ளியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய அவர், கூகுள், பேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களின் கொள்கைப் பிரிவு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் RAND கார்ப்பரேஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த பொருளாதார நிபுணராகவும் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், பாதுகாப்புத் துறை, எரிசக்தித் துறை போன்ற தேசிய பாதுகாப்புப் பிரச்னைகளில் மூத்த பதவிகளையும் வகித்து வந்தார்.

Pentagon, Us

இந்த நிலையில், தற்போது பாதுகாப்பு துணை செயலாளரின் தலைமை அதிகாரியாக இருக்கும் பிளம்பை, அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகனில் சார்பு செயலர் என்ற உயர் பதவியில் நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

இந்த செய்தி இந்திய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் என்பவர் குறிப்பிடத்தக்கது.

Also Read: “அம்மாவுக்கு ‘DATING APP’ install செய்து, கற்றுக்கொடுத்த மகள்..” : தமிழ் பட நடிகை நெகிழ்ச்சி !