உலகம்
இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை.. பெண் செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டது யாரால்?
1) வங்கதேசத்தில் ஆற்றில் மூழ்கிய கப்பல்
கோதுமை ஏற்றிச் சென்ற சிறிய ரக சரக்கு கப்பல், வங்கதேசத்தின் மேக்னா ஆற்றில் மூழ்கியது. வங்கதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இந்தியாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து, அதை மாவாக்கி விற்பனை செய்து வருகிறது. கப்பல், மேக்னா ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, இரும்பு பொருள் ஒன்றின் மீது மோதியதில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் கோதுமை முழுதுமாக நாசமடைந்தது. இது பற்றி வங்கதேச துறைமுக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
2) அதிபரான பின் முதல் முறையாக ஆசிய பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன்
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜப்பான் செல்ல உள்ளார். முன்னதாக இன்று தென் கொரியா செல்லும் அவர், தென் கொரிய அதிபர் மற்றும் அதன் பிறகு ஜப்பான் பிரதமரை சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க அதிபராக அதிபர் ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
3) இலங்கையில் புதிதாக 9 மந்திரிகள் பதவியேற்பு!
இலங்கையில் புதிதாக 9 மந்திரிகள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் புதிய மந்திரிகள் இன்று காலை பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து, நான்கு புதிய மந்திரிகள் இதற்கு முன்னர் பதவி பிரமாணம் செய்திருந்தனர். இதன்படி, ஜி.எல்.பீரிஸ், காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் இதற்கு முன்னர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
4) பாகிஸ்தான் குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை!
அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டத்தில், அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து பேசியிருக்கிறார். 2019 புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தியாவின் அணு ஆயுதங்கள், ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறது எனக் கூறியிருக்கிறார். தனது ஆயுதங்களை கொண்டு ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கும் பாகிஸ்தான், அணு ஆயுதங்களை நவீனப்படுத்தவும் செய்யும், அதிகரிக்கவும் செய்யும் என எச்சரித்திருக்கிறார்.
5) அல் ஜசீரா நிறுவன பெண் செய்தியாளர் சுட்டுக்கொல்லப்பட்டது யாரால்?
அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் சுட்டுக்கொல்லப்பட்டது யாரால் என்பது குறித்த புதிய தகவலை இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். அல் ஜசீரா செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா தங்கள் பாதுகாப்புபடையினரின் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனாலும், ஷெரீனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிக்குண்டை ஆய்வுக்காக தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே அதன் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு ஷெரீன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்த உறுதியான தகவலை தெரிவிக்க முடியும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!