உலகம்
விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க்?: பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு புதிய கட்டுபாடு!
1) உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி - ஜி7 நாடுகள் அறிவிப்பு!
உக்ரைன் மீது ரஷியா 3 மாதங்களுக்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு உதவி செய்ய ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு முன்வந்துள்ளன. ஜி7 கூட்டமைப்பு நாடுகள் 18.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 1.4 லட்சம் கோடி) நிதி உதவியாக வழங்கவுள்ளன. போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக ஜி7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2) பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் - இந்தோனேசியா அதிபர் அறிவிப்பு!
இந்தோனேசியாவில் தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால் ஏற்றுமதிக்கு விதித்த தடையை பரிசீலிக்குமாறு அரசுக்கு எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாமாயிலுக்கான ஏற்றுமதிக்கு வரும் 23ல் இருந்து தடை விலக்கப்படுவதாக இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது.
பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீங்கியதை தொடர்ந்து, அதை இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிகிறது.
3) ஆப்கனில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடவேண்டும்!
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் தலிபான் அரசின் நல்லொழுக்கங்களுக்கான துறையின் செய்தி தொடர்பாளர் ஆகிப் மகாஜார் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பயன்படுத்தியதைப் போன்ற முகக்கவசங்களையும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4) இலங்கையில் ஆகஸ்டு மாதம் முதல் உணவு தட்டுப்பாடு அபாயம்!
இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது : “நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கான உரம் எதுவும் இல்லை. இதனால் நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது. எனவே வருகிற ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் இப்போது உணவு நெருக்கடி நிலவுகிறது. எங்களிடம் டாலர் இல்லை. ரூபாயும் இல்லை. நாங்கள் நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
5) விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க்?
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை எலான் மஸ்க் மறுத்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !