உலகம்
“118 லிட்டர் தாய்ப்பால் விற்பனை” - பச்சிளம் குழந்தைகளின் பசியை போக்கிய இளம்தாய்.. நெகிழ்ச்சி சம்பவம்!
அமெரிக்காவில் பால்பவுடர் தட்டுப்பாட்டால் பசியால் துடித்த பல பச்சிளம் குழந்தைகளின் வயிற்றில் பாலைவார்த்துள்ளார் யூடாவை சேர்ந்த இளம் பெண்.
குடும்பம், குழந்தை, வேலை எனப் பல சுமைகளை சுமந்துக் கொண்டிருக்கும் நம் பெண்களுக்கு, தங்களுடைய தாய்ப்பாலை சுமப்பது என்பது இன்றையக் காலக்கட்டத்தில் சற்று சிரமமாகவே காணப்படுகிறது. அன்றைய காலங்களில் எல்லாம் சுமார் 4 வயது வரைக்கும் தாய்ப்பால் கொடுத்ததை எல்லாம் கேள்விபட்டிருக்கிறோம். அந்த அளவிற்கு பெண்களுக்கு பால் சுரக்கும். காரணம் அவரகளின் உடல்நிலை சீராக இருக்கும், பிள்ளை பெற்ற பிறகு தாய்ப்பால் சுரப்பதற்காக நல்ல சத்தாண உணவை கர்ப்பகாலத்தில் உட்கொள்வார்கள்.
ஆனால் இன்றைய மாடர்ன் காலக் கட்டத்தில் பெண்கள் 9 மாதம் வரை வேலைக்கு செல்கிறார்கள், ஃபாஸ்ட் ஃபுட், உடல்நிலையில் அதிக பிரச்சனைகள் என பலவற்றின் காரணமாக தாய்ப்பால் சுரப்பது என்பது வெகு விரைவிலேயே நின்று விடுகிறது. அதுமட்டுமின்றி சில நேரங்களில் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரக்காமல், தாய்மார்களுக்கு மார்பு வலி ஏற்பட்டு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால் சிலர் பசுமாட்டுப் பாலுக்கு மாறுகின்றனர், சிட்டிகளில் வாழும் சிலர் பால் பவுடர்களுக்கு மாற ஆரம்பித்துவிட்டனர். உலகில் தாய்ப்பால் தட்டுப்பாடு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் தாய்ப்பால் தினம் கொண்டாடி வருகிறோம்.
இந்தநிலையில், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புதிய முயற்சி செய்தார். தனக்கு சுரக்கும் அதிக அளவிலான பாலை விற்பனை செய்யப்போவதாக விளம்பரம் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும், அப்படியோரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
உலக நாடுகளின் வல்லரசான அமெரிக்காவில், பால்பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் பால் பவுடரை உற்பத்தி செய்து வந்த “All Baby Formula" என்ற முன்னணி நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தியதுடன், தொழிற்சாலையையும் இழுத்து மூடியுள்ளது. இதன் காரணமாக பால் பவுடருக்கு அதிக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தாய்மார்கள் செய்வதறியாது இருந்துள்ளனர்.
இந்த நிலையில் யூடாவைச் சேர்ந்த அலிசா சிட்டி என்ற இளம் தாய் தனக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பதால், அதை வீணாக்கிவிடாமல் சேகரித்து, பின்பு அதை விற்க முன்வந்துள்ளார்.
அதிக அளவில் சுரந்த தாய்ப்பாலை சேகரித்த அவர், அது கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ஃபிரீஸரில் வைத்து தேவைப்படுவோருக்கு தந்து வந்துள்ளார். அதாவது ஒரு அவுன்ஸ் தாய்ப்பால், ஒரு டாலர் என சுமார் 118 லிட்டர் தாய்ப்பாலை இதுவரை விற்றுள்ளார். பசியால் துடித்த பல பச்சிளம் குழந்தைகளின் பசியைப் போக்கிய அவரை உலகமே கொண்டாடி வருகிறது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்கிறது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்