உலகம்

“Get Out.. முதலில் காரில் இருந்து வெளியேறுங்கள்” : இனவெறி பேசிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய கார் டிரைவர் !

அமெரிக்காவில் கால்டாக்சி ஓட்டுனர் ஒருவர், தன் டாக்சியில் பயணம் செய்யும் பெண் இனவெறி கருத்து தெரிவித்தால், அவரை காரில் இருந்து இறங்க சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் செயல்படும் ‘Lyft’ என்ற போக்குவரத்து சேவை நிறுவத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் ஜேம்ஸ். இந்நிலையில் வழக்கம் போல பணிக்குச் செல்லும் போது, இவரது காரில் ஜாக்கி என்ற பெண் ஏறியுள்ளார். அப்போது, அந்த பெண், வண்டி இருக்கைக்குச் சென்றுக்கொண்டே, “ நீ ஒரு வெள்ளைக்காரனைப் போல் இருக்கிறாய்” என்றுக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜேம்ஸ், என்ன சொன்னீர்கள் என்று மீண்டும் கேட்டுள்ளார்.

உடனே சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண், சிரித்துக் கொண்டே டிரைவர் தோளில் தட்டி பேச்சை மாற்ற முயற்சி செய்துள்ளார். அவர் செய்த இந்த பேச்சு ஜேம்ஸிற்கு எரிச்சலுட்டிதால், காரில் இருந்து இறங்கும்படி கேட்டுள்ளார். மேலும் “அது எப்படி நீங்கள் கேட்கலாம், ஒரு வேளை வெள்ளையாக இல்லாமல் இருந்தால் என்ன வித்தியாசம்? எப்படி எவ்வாறு கேட்பீர்கள்” என கோவமாக கேட்டுள்ளார்.

இந்தநிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு அந்தப் பெண்ணுடன் வந்த நபர், ஜேம்ஸிடம் அத்துமீற முயற்சி செய்திருக்கிறார். அவரைப் பார்த்து இனவாதிகள் என்று கூச்சலிடுகிறார். இதுதொடர்பான வீடியோ காரின் முன்பகுதியில் பொறுத்தப்பட்ட வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து இந்த முழு வீடியோவையும் ஜேம்ஸ் அவரது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பின்னர் ஒரு போலிஸ் அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால் போலிஸார் நடவடிக்கை எடுப்பார்களா என உறுதியாக தெரியவில்லை என ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தனியார் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், அந்தப் பெண் மதுக்கடை உரிமையாளர் என்பதும், மதுக்கடையின் இணையதளம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தை மூடியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள Fossils Last Stand bar க்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான ஜேம்ஸ் போடே எடுத்த நிலைப்பாடு மிகவும் சரியானது என சமூக ஊடகங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.

அதில் “நன்றி, ஜேம்ஸ். உங்களைப் போன்றவர்கள் இந்த உலகில் அதிகம் தேவை. உங்களுக்கு நவடிக்கையை நான் எழுந்து நின்று வரவேற்கிறேன் ” என ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொருவர், “ஜேம்ஸ், நாங்கள் உங்களை நேசிக்கிறோம். என்ன தைரியம். அனைத்து மனித குலத்திற்காகவும் நீங்கள் நின்றதற்கு நன்றி ” எனப் பதிவிட்டுள்ளார். இனவெறிக்கு எதிரான இப்படியான சிறிய சம்பவங்களாக இருந்தாலும், அது உடனடியாக தட்டிக் கேட்கப் படவேண்டும் என ஜெம்ஸ் நினைத்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Also Read: அதிகரிக்கும் காலநிலை மாற்றம்.. 9 கோடி இந்தியர்கள் பட்டினியால் வாடும் அபாயம் - ‘பகீர்’ கிளப்பும் ஆய்வு !