உலகம்
மாணவியை கொன்று உடலை எரித்த மாணவர்கள்.. நைஜீரியா நாட்டில் நடந்த கொடூர சம்பவம்!
சிவில் சர்வீஸ் வேலைகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்கும் ஜான்சன்!
அரசு வேலைவாய்ப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு முடிவெடுத்திருக்கிறது. வரிக் குறைப்புகளுக்காக பணம் தேவைப்படும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முடிவை எடுத்திருப்பதாக டெய்லி மெயிலில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது. பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறும் பிரிட்டன் பிரதமர், தனது அமைச்சரவையின் உயர்மட்ட குழுவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தாய்நாட்டிற்காக உழைக்க வாருங்கள்- ரனில் விக்ரமசிங்கே
இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே எதிர்க்கட்சி தலைவர் சஜித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- “சம்பிரதாய அரசியலை கைவிடுங்கள். கட்சி பேதமின்றி தாய்நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இணைந்து பணியாற்ற எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கே பெரும்பான்மை பலத்தை நிருபித்துக் காட்ட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ.டி.எம். கார்டுகளில் கொரோனா வைரஸ்
ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும் போது ஏ.டி.எம். கிரெடிட் கார்டுகளில் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் வைரசை பரவவிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் 30 நிமிடங்களுக்கு பிறகு ரூபாய் நோட்டுகளில் வைரஸ்களை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. வைரஸ் 99.9993 சதவீத அளவுக்கு குறைந்தது. 24 மற்றும் 48 மணி நேரத்துக்கு பிறகு ரூபாய் நோட்டுகளில் முற்றிலுமாக வைரஸ் இல்லை. ஏ.டி.எம். மற்றும் கிரெடிட்கார்டுகளில் கொரோனா வைரசை பரவவிட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு 90 சதவீதம் தான் குறைந்து இருந்தது. 48 மணி நேரத்துக்கு பிறகும் கார்டுகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
மாணவியை கொன்று உடலை எரித்த மாணவர்கள்!
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சோகோடோ மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் ‘வாட்ஸ்-அப்’ குழு ஒன்றை வைத்துள்ளனர். டெபோரா சாமுவேல் என்கிற மாணவி ஒருவர் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை அந்த ‘வாட்ஸ்-அப்’ குழுவில் பகிர்ந்தாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட அந்த மதத்தை சேர்ந்த மாணவர்கள் மாணவி டெபோரா சாமுவேலை சூழ்ந்துகொண்டு சரமாரியாக கல்லால் அடித்து கொலை செய்தனர். அதன் பின்னர் ஆத்திரம் அடங்காத மாணவர்கள் மாணவியின் உடலை தீ வைத்து எரித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் !
ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபரான ஷேக் கலீபா நேற்று மதியம் அபுதாபி அதிபர் அரண்மனையில் காலமானார். இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 61-வயதான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராக ஆக உள்ளார்.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!