உலகம்
ஒரு சிப்ஸ்-ன் விலை ₹1.63 லட்சம்.. Black Hole - முதல் புகைப்படத்தை வெளியிட்ட வானியலாளர்கள்! #5IN1_WORLD
1) பிரம்மாண்டமான பார்பிக்யூ திருவிழா!
பிரேசிலின் பாராவ்பேபஸ் நகர் உருவானதன் 34-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 20,000 கிலோ இறைச்சிகளைக் கொண்டு பார்பிக்யூ திருவிழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. உலகிலேயே முதல் முறையாக அதிக அளவிலான இறைச்சியை கொண்டு தயாரிக்கப்பட்ட பார்பிக்யூக்களை சுவைக்க 70,000 மக்கள் பங்கேற்பு.
2) நண்பருக்கு தெரியாமல், ஆணுறையில் ஓட்டை போட்டு கர்ப்பமாக முயன்ற பெண் கைது!
தனது நண்பருக்கு தெரியாமல், ஆணுறையில் ஓட்டை போட்டு கர்ப்பமாக முயன்ற ஜெர்மனியை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். முதலில் Friends with Benefits-ஆக இருந்து, காலப்போக்கில் அந்த நபர் மீது காதல் அதிகமானதால், அவர் தன்னை விட்டுச் செல்லக் கூடாது என்பதற்காக தான் இவ்வாறு செய்ததாக அந்த பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
3) ஒரே ஒரு சிப்ஸ்-ன் விலை ₹1.63 லட்சம்!
ebay ஷாப்பிங் தளத்தில், ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ்-ஐ சுமார் 1.63 லட்சம் ரூபாய்க்கு இங்கிலாந்தின் Buckinghampshire-ஐ சேர்ந்த நபர் விற்பனை செய்துள்ளார். அந்த சிப்ஸ்-ன் வடிவம் மிகவும் தனித்துவமாக இருந்ததால் இவ்வளவு விலை நிர்ணயித்துள்ளாக குறிப்பிட்டுள்ளார்.
4) பால்வெளி மண்டலத்தின் மிக பெரிய கருந்துளையின் முதல் புகைப்படம் வெளியீடு!
பால்வெளி மண்டலத்தின் மையத்தில் நட்சத்திரங்களை விழுங்க கூடிய மிக பெரிய கருந்துளையின் முதல் புகைப்படம் ஒன்றை வானியல் வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர். இதனை ஈவன்ட் ஹாரிசான் டெலஸ்கோப் என்ற சர்வதேச அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பும் இதேபோன்ற கருந்துளையை படம்பிடிக்க முயன்று அது தோல்வியில் முடிந்தது. தற்போது எடுக்கப்பட்ட கருந்துளை மிக அருகிலேயே உள்ளது. இது, 27 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவிலேயே உள்ளது. இந்த கருந்துளை புகைப்படம் எடுப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள 8 ரேடியோ தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து உள்ளனர் என மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் வானியல் வல்லுனர் வின்சென்ட் பிஷ் கூறுகிறார்.
5) உக்ரைனில் இருந்து 60 லட்சம் பேர் வெளிநாட்டில் தஞ்சம்!
ரஷ்ய தாக்குதலை அடுத்து உக்ரைனில் இருந்து 60 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 90 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும் ஒரு கோடியே 40 லட்சம் உக்ரைன் நாட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய ராணுவ வீரர்கள் 26,000 பேர் போரில் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!