உலகம்

ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீ.. பல லட்சம் ஏக்கர் நிலம் நாசம்: கம்போடியாவுக்கு WHO பாராட்டு - என்ன காரணம்!

நவாஸ் ஷெரிப் மீண்டும் பாகிஸ்தான் திரும்புகிறார்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இம்ரான் கான் ஆட்சியை கவிழ்த்தது. இம்ரான்கான் பிரதமர் பதவி பறிபோனதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் இணைந்து ஆட்சியமைக்க உள்ளன.

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், நாடு திரும்பாமல் லண்டனிலேயே தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக அவரது கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் கொரோனா ஆதிக்கம் சரிவு !

தென்கொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா, ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலை இப்போது மாறி வருகிறது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 481 ஆக சரிவை சந்தித்தது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவது தென்கொரியா மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீ..!

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் பல ஹெக்டேர் நிலப்பரப்பிலான வனப்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. சல்டிகி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ, இதுவரை குடியிருப்பு பகுதிகளுக்கு பரவவில்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை . 150 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 45 தீயணைப்பு வாகனங்கள் உள்ளூர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் பலத்த காற்று வீசுவதால் தீயணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கம்போடியாவின் கோவிட் - 19 தடுப்பூசி திட்டத்தை WHO பாராட்டியுள்ளது.!

கம்போடியாவின் வெற்றிகரமான தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது, சுகாதார அமைப்பை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு பங்களித்துள்ளது என்ரு கம்போடியாவின் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி லி ஐலன் தெரிவித்துள்ளார்.

கம்போடியா ஆரம்ப நிலையிலேயே கோவிட் - 19 தடுப்பூசியின் முதல் டோஸ்களை விரைவாக செலித்தியது எனவும் மக்கள் அவர்களுக்கான சுற்று வரும்போது பூஸ்டர் டோஸ்களை செலுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். கம்போடியா தனது சமூக-பொருளாதார நடவடிக்கைகளை முழுமையாக மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனிமைப்படுத்தல் இல்லாமல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு அதன் எல்லைகளை திறந்தது குறிப்பிடத்தக்கது

இம்ரான் கான் ராஜினாமா.!

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திருடர்களுடன் பாராளுமன்றத்தில் அமர மாட்டேன் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 16 ஆயிரம் கோடி ஊழல் வழக்குகள் உள்ளவரை பிரதமராக தேர்வு செய்திருப்பதை விட நாட்டிற்குப் பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார். பிடிஐ கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ஷாங்காயில் உணவு தட்டுப்பாடு: நவாஸ் ஷெரீப் வீட்டு முன்பு போராட்டம் - கையறுநிலையில் பாகிஸ்தான் #5IN1_WORLD