உலகம்
ஷாங்காயில் உணவு தட்டுப்பாடு: நவாஸ் ஷெரீப் வீட்டு முன்பு போராட்டம் - கையறுநிலையில் பாகிஸ்தான் #5IN1_WORLD
1) பிரான்ஸ் அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு
பிரான்சில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரான்சில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மேக்ரான் மீண்டும் வெற்றிப்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரான்சில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருபவர் இமானுவேல் மேக்ரான். இவருடைய 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
2) ட்விட்டர் நிறுவன இயக்குநர்கள் குழுவில் இணைய விரும்பவில்லை - எலான் மஸ்க்
டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைய விரும்பவில்லை என்று எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் மாபெரும் செல்வந்தர்களில் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், முன்னணி சமூக வலைதள நிறுவனமான “ட்விட்டர்” நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கினார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக அவர் நியமிக்கப்படுவார் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவர் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைய விரும்பவில்லை என்று தெரிவித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
3) உலகத் தலைவர்களின் அதிகபட்ச ஆதரவு எங்களுக்கு தேவை - இலங்கை எதிர்க்கட்சி தலைவர்
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய அரசாங்கத்தை காரணம் காட்டுகிறார்கள். இந்நிலையில், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச “இது இயற்கையாக உருவாகியிருக்கும் போராட்டம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசியலமைப்பு நடைமுறைகள் மூலம் கிடைக்கும் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவோம். இலங்கைக்கு உதவுமாறு அனைத்து உலகத் தலைவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூரியுள்ளார்.
4) லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் வீட்டு முன்பு இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம்
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை அடுத்து புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது கட்சி ஆதரவாளர்கள் லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதுபற்றி அறிந்ததும் நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பு மோதலை அங்கு இருந்த போலீசார் கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
5) ஷாங்காயில் உணவு தட்டுப்பாடு
சீனாவில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவி வருவதால் பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் மிக பெரிய வர்த்தக நகரமாக திகழும் ஷாங்காய் தற்போது கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகிறது. ஷாங்காய் நகரில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஷாங்காயில் தற்போது உணவுபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்களைசேர்ந்தவர்கள் உணவு பொருட்கள் வழங்கி வந்தாலும் அது பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் பொதுமக்கள் தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்