உலகம்
ரயில் நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்.. 30 பேர் பலி - அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது சீனா அதிரடி!
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு!
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராமடெர்க்ஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷியா ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் வெளியுகியுள்ளன. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யா தாக்குதல் நடத்திய இந்த ரயில் நிலையம் வழியாகத்தான் மீட்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகள் நீக்கிம்!
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் அங்கு 24 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பரிசோதனைகளையும் அவ்வப்போது சீனா நடத்தி வருகிறது. உணவுப்பொருட்களை மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஷாங்காய் நகரில் கொரோனா பரவலை திறம்பட கையாண்டு கட்டுப்படுத்த தவறிவிட்டதாகக் கூறி 3 அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கனடாவில் பரவும் "ஜாம்பி" நோய்!
கனடாவில் கொரோனாவை விட கொடூரமான ஜாம்பி நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. கனடா நாட்டில் உள்ள மான்களுக்கு இடையே நாள்பட்ட விரய நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட மிருகங்கள் வாயில் வழக்கத்தை விட அதிகமாக எச்சில் வடிவது, மற்ற மிருகங்களுடன் சேராமல் இருப்பது, வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைககள், அதிகமாக நீர் வெளியேறுவது, உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் உள்ளன. இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளை அடித்து சமைத்து சாப்பிட்டாலோ, நோய் பாதித்த விலங்குகளை கையாண்டால் கூட அந்த கிருமிகள் மனித உடலுக்குள் சென்று இந்த நோய் மனிதர்களுக்கு பரவவும் வாய்புள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனுக்கு எதிரான போரில் பேரிழப்பு - ரஷ்யா முதன்முறையாக ஒப்புதல்!
முதன்முறையாக உக்ரைனுடனான போரில் நிறைய வீரர்களை இழந்து விட்டோம் என ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் கிரெம்ளின் கூறும்போது, உக்ரைன் போரில் ரஷியா படைவீரர்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது எங்களுக்கு பெரிய கவலையை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க ஜப்பான் முடிவு!
ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் வர்த்தகத் துறை அமைச்சர் கொய்ச்சி ஹகியுடா கூறும்போது, “ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை காரணமாக அந்நாட்டிடமிருந்து படிப்படியாக நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைக்க உள்ளோம். மாற்று முறையில் நிலக்கரி இறக்குமதி செய்ய வழிகளைத் தேடி வருகிறோம்” என்று தெரிவித்தார். பல வகையிலும் நெருக்கடிகளை சந்தித்து வரும் ரஷ்யாவுக்கு ஜப்பானின் இந்த முடிவு புதிய நெருக்கடியாக அமைந்துள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?