உலகம்
#5in1_World | பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா... இலங்கை அரசின் முயற்சி வெல்லுமா?
1) இலங்கை வருவாயை அதிகரிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்கும் கூடுதல் வரி மசோதா பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதாவை பசில் ராஜபக்சே தாக்கல் செய்திருந்தார். இலங்கை ரூபாயில் ஆண்டு வருமானம் ரூ.200 கோடி ஈட்டுபவர்களுக்கு இனி 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தனிநபர்கள், நிறுவனங்களுக்கும் கூடுதல் வரி பொருந்தும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் வருவாயை அதிகரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2) ஆயுதங்கள் தந்து உதவுங்கள் - நேட்டோவுக்கு உக்ரைன் கோரிக்கை
ஆயுதங்களை தந்து உதவுமாறு நேட்டோவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரேசில்ஸ்-ல் உள்ள நேட்டோ அமைப்பின் தலைமையகத்திற்கு உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலிபா வருகை வந்தார். அவர் நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் பேசுகையில், "எனது நோக்கம் மிகவும் எளிமையானது... அது என்னவென்றால் ஆயுதங்கள், ஆயுதங்கள், ஆயுதங்கள் தான். எப்படி சண்டையிடுவது எப்படி வெற்றிபெறுவது என்று எங்களுக்கு தெரியும். அதிக ஆயுதங்கள் எங்களுக்கு கிடைத்து அது விரைவாக உக்ரைனுக்கு வந்தால் புச்சா நகரில் நடந்த அநீதி போன்று அல்லாமல் அதிக மனித உயிர்கள் பாதுகாக்கப்படும்" என்றார்.
3) உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 43.06 கோடியாக உயர்வு
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 கோடியே 06 லட்சத்து 10 ஆயிரத்து 659 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 கோடியே 50 லட்சத்து 16 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 90 ஆயிரத்து 786 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 கோடியே 06 லட்சத்து 10 ஆயிரத்து 659 பேர் குணமடைந்துள்ளனர்.
4) புச்சாவில் நடந்தது போல் மரியுபோல் நகரிலும் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது- ஜெலன்ஸ்கி
புச்சாவில் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டது என்று உக்ரைன் குற்றம் சாட்டியது. இதற்காக ரஷியாவுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் புச்சாவில் நடந்தது போல் மரியுபோல் நகரிலும் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். துறைமுக நகரமான மரியு போலில் ரஷியா படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி உள்ளன. அங்குதான் அதிகமாக பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட அழிந்து போன இடமாக மரியுபோல் மாறியிருக்கிறது.
5) ஒமைக்ரானுக்கு புதிய தடுப்பூசி - ஆஸ்திரிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஒமைக்ரானுக்கு எதிராக புதிய தடுப்பூசியை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரியா நாட்டில் ஒமைக்ரான் உள்ளிட்ட சார்ஸ்-கோவ்-2 வகைகளுக்கு எதிராக புதிய தடுப்பூசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே தடுப்பூசி போட்டு நோய் எதிர்ப்புச்சக்தி பெறாதவர்களுக்கும் இந்த தடுப்பூசி பலன் அளிக்கும். வியன்னா மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி, ஆர்.பி.டி. என்று அழைக்கப்படுகிற வைரசின் ஏற்பி பிணைப்பு களங்களை குறிவைக்கிறது. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்ததில் இது நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!