உலகம்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை.. வீதியில் இறங்கிய மக்கள் : அங்கு நடப்பது என்ன ?

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதி கோத்த பயராஜபக்சே பதவி விலகவேண்டு மென்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இந்த நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை முதல் மக்கள் இலங்கையில் போராட்டங்களில் ஈடு பட்டுவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி, ராஜபக்சே-வே “வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையில் போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதால் கலகத் தடுப்பு காவல்துறையினர் அப்பகு திக்கு கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்களை கொண்டுவந்தனர். இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பை நடத்திய மூத்த அமைச்சர்கள் குழு, “வன்முறைக்கு” “எதிர்க் கட்சிகள் தான் காரணம்” என குற்றம் சாட்ட முனைந்தது. இவர்களின் பேச்சே ராணுவத்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “அவசரகால நிலை, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. பொதுப்பாது காப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்காக” இந்த நடவடிக்கை எனக் கூறியுள்ளது.

இதற்கிடையில் இலங்கையின் தலைநகரில் தமது வீட்டின் முன் போராட்டம் நடத்தியவர்கள் “ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதிகள்” என்று ராஜ பக்சே குற்றம் சாட்டியுள்ளார். போராட் டத்தைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பலர் திட்டமிட்ட தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் “அரபு வசந்தத்தை உரு வாக்குவோம்” என்ற முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

சித்ரவதை குற்றச்சாட்டுகள்

போராட்டத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் சிலர் காவல் நிலையங்களில் சித்ரவதைக்குள்ளானதாக புகார் எழுந்துள்ளது. காவல் நிலையத்திற்கு சென்று திரும்பிய சட்டத்துறை நிபுணர் ஸ்வஸ்திகா அருலிங்கம், “போராட்டத்தில் தொடர்பில்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். “நான் அவர்களைச் சந்தித்தபோது அவர்களில் சிலருக்கு ரத் தம் கொட்டியது. இராணுவம் மற்றும் சிறப்புப் படையினர் அவர்களை மோச மாக தாக்கியுள்ளனர்” என்று கூறினார்.

அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, இந்த எதிர்ப்பு நெருக்கடி யின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. மக்களிடம் விரக்தி அடைந்துள்ளனர். ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர், அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை அரசால் நிர்வகிக்க முடிய வில்லை என்று மூத்த அரசியல் நிபுணர் ஜெயதேவ உயங்கொட கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் அரசியல் கட்சிகளைச் சாராமல் மக்கள் தானாக முன்வந்து வீதிக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்” என்றார். இலங்கையில் உள்ள ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில், “நாங்கள் நிலைமைகளைக் கண்காணித்து வருகிறோம், வன்முறை தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களால் கவலையடைந் துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: உயிர் வாழவே போராடும் நிலை.. அதிபர் வீட்டை முற்றுகையிட்ட இலங்கை மக்கள் - தடியடி நடத்தியதால் மூண்ட கலவரம் !