உலகம்

ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இந்தியாவிற்கு ஆபத்தா? : வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்!

ஜப்பானின் ஃபுக்குஷிமா அருகே ஆழ்கடலில் 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நகரில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 20 லட்சம் வீடுகளில் இருளில் மூழ்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது மக்களை அச்சமடைய செய்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஜப்பான் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது. நிலநடுக்கத்துடன் சுனாமியும் ஏற்பட்டதால் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் 10 வருடங்கள் கழித்து சக்தி வாழ்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களைப் பீதியடைய வைத்துள்ளது.

இந்நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. இந்தியாவின் லடாக் பகுதியில் லேசான அதிர்வுகள் இருந்ததா வானிலை ஆய்வு மையம் தெரிந்துள்ளது. அதேபோல் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிற்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: எச்சரிக்கை : காலநிலை மாற்றத்தால் இந்திய மக்கள் சந்திக்கவிருக்கும் பேராபத்து - IPCC ஆய்வு சொல்வது என்ன?