உலகம்
‘Bio war’ கையில் எடுக்கும் உக்ரைன்? : அமெரிக்காவின் ரத்தம் உறைய வைக்கும் உண்மை திட்டத்தை வெளியிட்ட ரஷ்யா!
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
அதன் ஒருபகுதியாக தற்போது, அமெரிக்காவின் தலைமையில் கீழ் உக்ரைனில், உயிரியல் ஆயுதங்களை பரிசோதனை செய்யும் கூடங்கள் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மையென அம்பலமாகியுள்ளது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரியல் ஆயுதங்களை (Biological warfare) பரிசோதனை செய்யும் கூடங்கள் உக்ரைனில் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரத்துறை செயலாளர்களில் ஒருவரான விக்டோரியா நுலாண்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.
உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதப் பரிசோதனைக் கூடங்கள் இருப்பதாக ரஷ்யாவும், சீனாவும் குற்றம் சாட்டியிருந்தன. இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. சபைக்கான ரஷ்யப் பிரதிநிதி டிமிட்ரி போலி யான்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ராணுவத்துறை சார்பாக பல ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அத்தகைய உயிரியல் ஆயுதப் பரிசோதனைக் கூடங்கள் உடனடியாக அழித்தொழிக்கப்பட வேண்டும்.
இது உலகம் முழுவதும் உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கும் அமெரிக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைந்திருக்கிறது என்று போலியான்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள விருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!