உலகம்

ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்.. என்ன செய்யப்போகிறது ஒன்றிய அரசு?

உக்ரைன் மீது ரஷ்யா 17வது நாளாகத் தனது தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இதனால் சொந்த மண்ணை விட்டு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அதேபோல் ரஷ்யாவிற்குப் பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல்வேறு தடைகள் உலக நாடுகள் விதித்து வருகிறது.

இந்நிலையில் swift முறையிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மாதா மாதம் அவர்கள் நாடுகளிலிருந்து பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் வங்கிகள் வழியாக அனுப்பப்படுகிறது. தற்போது swift முறையிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி கட்டணம், இதர செலவுகளுக்காகக் கட்டணங்களைக் கட்ட இயலா நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் visa, master card அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளது. அதன் மூலமும் அவர்களுக்குப் பணம் அனுப்ப இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போல மூன்று மடங்கு இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படித்து வருகிறார்கள்.

தற்போது இந்த தடை காரணமாக அவர்களது செலவுக்குப் பணம் கிடைப்பதிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: ரஷ்யா - உக்ரைன் போர்.. மீண்டும் பாதிப்பை சந்திக்கும் உலக நாடுகள் : WHO விடுத்த எச்சரிக்கை என்ன?