உலகம்

மிக உயரமான யானை உயிரிழப்பு... சோகத்தில் பொதுமக்கள்.. ‘நடுங்கமுவ ராஜா’வின் பெருமை தெரியுமா?

இலங்கையின் மிக உயரமான யானையான நடுங்கமுவ ராஜா உயிரிழந்தது. 68 வயதான இந்த யானை கண்டி எசல ஊர்வலத்தில் பல ஆண்டுகளாக புனித பல்லைச் சுமந்தது.

இலங்கையில் பத்தரை அடி உயரம், மிக நீளமான தந்தங்கள் என பிரம்மாண்டமான யானை நடுங்கமுவ ராஜா (68). இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்த திருவிழாவில் புத்தரின் புனிதப் பல்லைச் சுமந்து வருவது நடுங்கமுவ ராஜாதான். இந்த நிகழ்வின்போது ராஜா யானையை 90 கி.மீ வரை நடக்க வைத்து கூட்டிச் செல்வார்கள். இதனால், இந்த யானையை நாட்டின் அறிவிக்கப்படாத பொக்கிஷமாக அரசும் மக்களும் கருதி வருகின்றனர்.

கடந்த 2015ல் இந்த யானை மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. இதனால் யானை காயமடைந்தது. இதனால் சாலை விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நேரக்கூடாது என்பதற்காக துப்பாக்கி ஏந்திய ராணுவ படை ஒன்று எப்போதும் யானையுடன் இருப்பார்கள்.

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நடுங்கமுவ ராஜா கடந்த முறையும் எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த யானை உயிரிழந்தது இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உலகமே பரிதாபப்பட்ட ‘டிக்கிரி’ யானை உயிரிழப்பு... அன்பை போதித்த புத்தரின் கோவிலில் அடிமையாக கொடுமரணம்!