உலகம்

உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையே போர் பதற்றம்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா? : பின்னணி என்ன?

கச்சா எண்ணெய்தான் பெட்ரோலின் மூலப்பொருள். உலகின் WTI (West Texas Intermediate) மற்றும் Brent என இரண்டு கச்சா எண்ணெய்தான் பெட்ரோல் தயாரிக்கத் தேர்வையான மூலப்பொருட்களாகும்.

இந்த WTI என்பது டெக்ஸாஸ் போன்ற வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கிடைக்கிறது. அதேபோல் Brent என்பது நார்வே, ஷெட்லேண்ட் தீவு, ரஷ்யா நாடுகளில் இருந்தும் கிடைக்கிறது. இதில், அதிகப்பட்டியாக 77% ஆசியாவிலும், 23% ஐரோப்பாவிலும் இருப்பதால் ரஷ்யாவை Eurasia என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு Brent கச்சா எண்ணெய்தான் பெரும்பாலும் தேவைப்படுவதால், ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து Brent கச்சா எண்ணெய் மற்றும் LNG (Liquified Natural Gas), சமையல் எண்ணெய் போன்ற இன்னபிறகுவற்றையும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையே மூண்ட போர் பதற்றத்தால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி இறக்குமதியில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தற்போது வரை கச்சா எண்ணெயின் விலை 91 டாலர் அதாவது இந்தியா மதிப்பில் சுமார் 6,787 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும். குறிப்பாக, பெட்ரோலின் விலை லிட்டருக்கும் 8 ரூபாயும். டீசல் விலை 5 ரூபாய் வரை உயரும் எனக் கூறப்படுகிறது. இந்த போர் இருநாடுகள் இன்றி இந்தியா போன்ற நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உக்ரைனில் உக்கிரமடையும் போர்: 2 லட்சம் படைகளை இறக்கிய ரஷ்யா; பீதியில் உலக நாடுகள்!