உலகம்
”ரெண்டு பேருக்கும் ஒரே சைஸ்; அதான் தூக்கிட்டே” - 2வது திருமணத்தின் போது முதல் மனைவியால் சிக்கிய கணவன்!
தன்னுடைய உடை மற்றும் நகைகளை திருடி என் முன்னாள் கணவர் அவரது இரண்டாவது மனைவிக்கு கொடுத்தது தொடர்பாக அமெரிக்க பெண் ஒருவர் போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
அதன்படி திருமண நாளன்றே மணப்பெண் மற்றும் மணமகளை அமெரிக்க போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
ஆடம், மேரி என்ற இருவரும் அமெரிக்காவில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது நட்பாகி, காதலாகி, திருமணம் செய்துக் கொண்டனர். சில காலம் ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதி அண்மையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.
இதனையடுத்து அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த செல்சியா என்ற பெண்ணுடன் பழகி வந்த ஆடம் அவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.
அதன்படி அவர்களது திருமணம் அண்மையில் நடைபெற இருந்தது. அப்போது செல்சியா அணிந்திருந்த உடையும் நகையும் எங்கேயோ பார்த்தது போல் உள்ளதே எனக் கூறி மேரிக்கு திருமணத்திற்கு சென்றிருந்த அலுவலக நண்பர் ஒருவர் போட்டோ எடுத்து அனுப்பியிருக்கிறார்.
Also Read: “தமிழ் பெண்ணை காதலித்து திருமணம்.. இணையத்தில் வைரலாகும் MAXWELL கல்யாண பத்திரிகை” : பின்னணி என்ன?
அதைக் கண்ட மேரி, செல்சியா அணிந்திருந்தது திருடுபோன தன்னுடைய திருமண உடை என தெரியவந்ததை அடுத்து இது தொடர்பாக போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
அந்த புகாரில் முன்னாள் கணவர் ஆடம் தன்னுடைய திருமண உடை மற்றும் நகையை திருடி இரண்டாவது மனைவிக்கு கொடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். உடனடியாக திருமணம் நடக்கும் இடத்துக்கு விரைந்த போலிஸார் ஆடம் செல்சியாவை கைது செய்திருக்கிறார்கள்.
காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போது நடத்தப்பட்ட விசாரணையில் மேரியின் உடைமைதான் என அவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து அவற்றினை மேரியிடமே ஒப்படைத்திருக்கிறார்கள்.
இது போக, விசாரணையின் போது ஏன் அப்படி செய்ததாக போலிஸார் ஆடமிடம் கேட்டதற்கு மேரிக்கும் செல்சியாவுக்கும் ஒரே உடலமைப்பு இருப்பதால் அவ்வாறு செய்ததாக கூறியிருக்கிறார்.
முன்னதாக செல்சியாவுடன் ஆடமிற்கு தொடர்பு இருந்ததால்தான் ஆடமும் மேரியும் விவாகரத்து செய்ததற்கு காரணமாக இருந்ததாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!