உலகம்

“20 ஆண்டுகளாக தொடர் தலைவலி.. சிகிச்சைக்கு சென்றவர் தலையில் இருந்த துப்பாக்கி குண்டு” : ‘பகீர்’ சம்பவம்!

சீனாவைச் சேர்ந்த சியாவோ சென் என்பவருக்கு 28 வயதாகிறது. இவருக்கு சிறுவயதில் இருதே தலைவலி இருந்ததாகக் கூறப்படுகிறது. சரியான தூக்கம் இல்லாததால் இந்த தலைவலி ஏற்பட்டதாக நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்.

பின்னர் ஒருநாள் தலைவலி கடுமையானதால் மருத்துவரை அணுகியுள்ளார். விவரங்களை கேட்டறிந்த மருத்துவர் சந்தேகமடைந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்க்க பரிந்துரைத்துள்ளார். பின்னர் அந்த ஸ்கேன் ரிப்போட்டை பார்த்தபோது, சென்னின் மண்டையோட்டின் இடதுபக்கம் ஒரு விசித்திரமான பொருள் ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர் ஆய்வு செய்து பார்த்தபோது, அது உலோகத்திலான துப்பாக்கி குண்டு என்பது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் துப்பாக்கிக் குண்டை அகற்றினர்.

பின்னர் இதுதொடர்பாக சியாவோ சென் கூறுகையில், தனக்கு 8 வயது இருக்கும்போது அவரது சகோதருடன் விளையாடியபோது, அவர் பயன்படுத்திய ஏர்கன் மூலம் வந்திருக்கலாம் என்றும் அவரது தலையில் பாய்ந்தது தெரியாமல் விளையாட்டின் போது ஏற்பட்ட காயம் என நினைத்து பெற்றோரிடம் கூறாமல் விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களும் அவர் இவ்வளவு நாள் உயிருடன் இருந்ததே அதிசயம்தான் என்று கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “வென்டிலேட்டர் சிகிச்சையில் லதா மங்கேஷ்கர்” : ICU கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்!