உலகம்

சிகரெட்களை சேகரிக்கும் காகங்கள்.. “1 குப்பை எடுத்தாதான் ஒரு துண்டு ரொட்டி கிடைக்கும்” - அசத்தும் ஸ்வீடன்!

ஸ்வீடன் நாட்டில் பூங்காவில் உள்ள குப்பைகளை சேகரித்து சிறிய அட்டைப் பெட்டிகளில் காகம் எடுத்துப்போடும் காட்சி வைரலாகி வருகிறது.

ஸ்வீடன் நாட்டில் தெருக்களிலும் சதுக்கங்களிலும், பூங்காக்களிலும் வீசியெறியப்பட்ட சிகெரெட் துண்டுகளை பொறுக்கும் பணியில் காகங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

ஸ்வீடன் நாட்டின் தெருக்களில் ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் சிகரெட் துண்டுகள் வீசியெறியப்படுவதாக Keep Sweden Tidy Foundation தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, துப்புரவு செய்வதற்கான செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காகங்களை வைத்து சுத்தப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு சிகரெட் துண்டையோ, குப்பையையோ பொறுக்கி அதற்கான இயந்திரத்தில் போட்டால், அதற்குச் சன்மானமாக காகங்களுக்கு ரொட்டித் துண்டு உணவாகக் கிடைக்கும். அதற்கென உள்ள பெட்டியிலிருந்து உணவுப்பொருள் விழும்.

Corvid Cleaning எனும் நிறுவனம் காகங்களைக் கொண்டு சுத்தம் செய்யும் இந்தப் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் பணியில் காகங்களை ஈடுபடுத்துவதால், ஸ்வீடன் நகரில் சிகரெட் துண்டுகளை அகற்றும் செலவில் குறைந்தபட்சம் 75 விழுக்காடு சேமிக்கமுடியும் என்று Corvid Cleaning நிறுவனர் தெரிவித்துள்ளார்.

Also Read: பெரும் ஹிட் ஆன ‘Kacha Badam' பாடகர் பூபன் கொடுத்த புகார்... என்ன நடந்தது?