உலகம்
9வது மாடியில் இருந்து விழுந்து பிரபல அழகி மரணம் : கொலையா தற்கொலையா என நியூயார்க் போலிஸ் தீவிர விசாரணை!
அமெரிக்காவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற அழகிகள் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றவர் செஸ்லி கிறிஸ்ட். தற்போது அவருக்கு வயது 30.
செஸ்லி நியூயார்க்கின் மான்ஹாட்டனில் உள்ள 60 மாடி குடியிருப்பில் உள்ள 9வது தளத்தில் வசித்து வந்தார். இப்படி இருக்கையில் நேற்று (ஜன.,30) 7 மணியளவில் செஸ்லி மாடியில் இருந்து குதித்து இறந்ததாக நியூயார்க் போலிஸார் கூறியுள்ளனர்.
கிறிஸ்டின் உடலை மருத்துவ வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள் எனவும் அதன் பிறகே செஸ்லியின் மரணம் தற்கொலையா கொலையா என விசாரணை முடுக்கிவிடப்படும் என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜாக்சன் மிச்சிகனில் 1991ம் ஆண்டு பிறந்த செஸ்லி கிறிஸ்ட், 2017ல் தெற்கு கரோலின் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர், வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார்.
சிவில் வழக்கறிஞராக வடக்கு கரோலினாவில் பணியாற்றிய செஸ்லி, White Collar Glam என்ற பெண்களுக்கான ஆடை வலைப்பதிவையும் நிறுவினார். பின்னர் 2019ல் அமெரிக்காவின் கரோலினாவில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டத்தையும் வென்றார்.
அதன் பின்னர் அழகி பட்டத்தில் இருந்து விலகியவர் நியூயார்க்கின் எக்ஸ்ட்ரா என்ற பத்திரிகையில் நிரூபராகவும் பணியாற்றியிருக்கிறார்.
செஸ்லி கிறிஸ்டின் மறைவுக்கு 2021ல் உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!