உலகம்
“இதுக்கு முடிவே இல்லையா?”: மிரட்டும் NeoCoV.. 3-ல் ஒருவர் மரணம் - ‘பகீர்’ எச்சரிக்கை விடுத்த சீனா, ரஷ்யா!
தென் ஆப்ரிக்காவில் தற்போது பரவி வரும் புதிய உருமாற்றமடைந்த வைரஸான 'நியோகோவ்' அதிக பாதிப்பையும், இறப்பையும் ஏற்படுத்தும் என சீனாவின் வூஹான் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோன வைரஸ் தொற்று உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டு காலமாக கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து பல லட்சக்கணக்கானோரை கொன்றொழித்து, தற்போதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மற்றொரு கொடூரமான உருமாறிய வைரஸ் தோன்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த NeoCoV வைரஸ் கடந்த 2012 மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய MERS-CoV வைரஸ் மற்றும் கொரோனாவை ஏற்படுத்திய SARS-CoV 2- ன் கலவையாக காணப்படுகிறது.
NeoCoV வைரஸ், தென் ஆப்ரிக்காவில் முதலில் வவ்வால் இனங்களில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது bioRxiv இணையதளத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி NeoCoV மற்றும் அதன் நெருங்கிய தொடர்புடைய PDF-2180-CoV வைரஸ் ஆகியவை சில வகை என்சைம்களைப் பயன்படுத்தி மனிதர்களிடம் பரவும் தன்மை பெற்றுள்ளது.
இந்த புதிய வைரஸ் MERS-CoV-ன் அதிக இறப்பு விகிதத்தையும் தற்போதைய SARS-CoV-2 கொரோனா வைரஸின் அதிக தொற்று விகிதத்தையும் கொண்டது. MERS வைரஸின் அதி இறப்பு விகிதம் சராசரியாக பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவர் இறப்பதற்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய வலைத்தளமான ஸ்புட்னிக் எச்சரித்துள்ளது.
வூஹான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸ்கள், மனித உடலில் உள்ள செல்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவதால் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இது 3ல் ஒருவரை உயிரிழக்க வைக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவின் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலே இன்னும் முடிவடையாத நிலையில், மிகவும் ஆபத்தான அடுத்த வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!