உலகம்

"கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டுவோம்".. WHO தலைவர் கூறுவது என்ன?

சீனாவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றத் தடுப்பூசி கண்டுபிடித்தாலும், டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என கொரோன உருமாற்றம் அடைந்து கொண்டே வருகிறது.

இதனால் உலகம் முழுவதும் கொரோன 2, 3வது அலை வீசி வருகிறது. மேலும் கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் உலக நாடுகள் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் இந்த ஆண்டே கொரோனாவுக்கு முடிவு கட்ட முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்று மூன்றாவது ஆண்டில் அடி எடுத்துவைத்துள்ளது. உலகம் இக்கட்டான தருணத்தில் உள்ளது. உலக நாடுகள் ஒருங்கிணைந்து கொரோனாவின் கடுமையான கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

கொரோனாவை ஒழித்துக் கட்ட பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு பணியாற்றி வருகிறது. மேலும் தொழில்நுட்ப உதவிகளையும், வியூகங்களையும், தேவையான ஆதாரங்களை அளித்து வருகிறது. உலக நாடுகள் வியூகங்களைப் பயன்படுத்தி விரிவான நடவடிக்கை எடுத்தால் இந்த ஆண்டே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “கொரோனா வைரஸ் சீனாவால் பரப்பப்பட்டதா?” : ‘Bio Weapon’ சூழ்ச்சி குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!