Representational image
உலகம்
நடுவானில் U turn போட்டு திரும்பிய விமானம்.. காரணம் ஒரே ஒரு பயணி.. என்ன நடந்தது தெரியுமா?
ஒரு பயணி முகக்கவசம் அணிய மறுத்த காரணத்தால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட்லைனர் விமானம், நடுவானிலேயே திரும்பி புறப்பட்ட இடத்திற்கே சென்றது.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், பொது இடங்களிலும், விமானப் பயணத்தின்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், பயணிகள் பலரும் முகக்கவசம் அணிய மறுத்து பணிப்பெண்களை திட்டுவதும், தொல்லை தருவதுமாக இருந்தனர்.
இதையடுத்து, அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஜனவரி 2021ல் தங்களது விமானங்களில் முகக்கவசம் அணிவதை கடுமையாக்கியது. முகக்கவசம் அணிய மறுப்பவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது என அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மியாமியில் இருந்து 129 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் வியாழக்கிழமை அன்று லண்டனுக்கு புறப்பட்டது. அதில் விதியை பின்பற்றாமல் ஒரு பயணி முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். பயணிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பணிப்பெண்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்தப் பயணி முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். இதையடுத்து போலிஸாருக்கு தகவல் சொல்லிவிட்டு, நடுவானிலேயே விமானத்தை திருப்பி மீண்டும் மியாமி கொண்டு செல்லப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும், போலிஸார் முகக்கவசம் அணியாத நபரை இறக்கி அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், தடைசெய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் சேர்த்தது.
ஒரு பயணி முகக்கவசம் அணிய மறுத்த காரணத்தால் விமானம் நடுவானிலேயே திரும்பி புறப்பட்ட இடத்திற்கே சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்