உலகம்

மெக்சிகோவின் ’பெர்முடா முக்கோண’ பாலைவனத்தில் 12 பேர் மாயம்? - 3 மாதமாக தொடரும் தேடுதல் வேட்டை!

வடக்கு மெக்சிகோவில் உள்ள சிஹுவாஹுவான் என்ற பாலைவனம் உள்ளது. அது அமெரிக்காவின் பெர்முடா முக்கோணம் எனவும் அழைக்கப்படும். இந்த பாலைவனம் வழியாக அமெரிக்காவை கடப்பதற்கு கோயாமே நகரத்திலிருந்து வந்த 13 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த புலம்பெயர்ந்தோர் கூட்டத்தில் 14 வயதுடைய சிறுவனும் இருந்திருக்கிறான். பாலைவனத்தை கடக்கை எத்தனித்திருக்கிறான். அவர்கள் அமெரிக்காவை கடப்பதற்காக வழிநெடுகிலும் பல்வேறு அபாயங்களை கடந்திருக்கிறார். எல்லையின் மறுமுனையில் இருக்கும் குடும்பத்தினருடன் இணைவதற்காக அந்த புலம்பெயர்ந்தோர் கூட்டத்தில் சிறுவனும் இணைந்திருக்கிறான்.

அப்போது ஸேவியர் ரிகார்டோ என்ற நபர் ஒருவர் தனது மனைவியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, தான் கடத்தல்காரர்களிடம் 1200 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளேன். அதன்மூலம் அவர் டெக்ஸாஸ் மாகாணத்தை அடைவதற்கான வழியை காண்பிப்பார் எனக் கூறியுள்ளார்.

ஆனால், அவர்களது கடைசியான தொடர்பு அந்த தொலைப்பேசி பேச்சாக அமைந்திருக்கிறது. அதன் பின்னர் அந்த புலம்பெயர்ந்தோர் கூட்டத்தைச் சேர்ந்த 12 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். கூட்டத்தில் இருந்த சிறுவன் மட்டும் தப்பித்திருக்கிறான்.

பாலைவனத்தை கடந்து வந்த சிறுவன் மெக்சிகோ அதிகாரிகளிடம் கூறியதாவது, ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று எங்களை தடுத்து நிறுத்தியது. அப்போது வயதில் குறைந்தவனாக இருப்பதால் என்னை விட்டுவிட்டு என்னுடன் வந்தவர்களை அழைத்துச் சென்றுவிட்டது எனக் கூறியிருக்கிறான்.

அப்படியாக காணாமல் போன புலம்பெயர்ந்தோரை சுமார் ஒரு மாதகாலமாக தேடியும் மெக்சிகோ அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் தேடுதல் பணியை கைவிட்டது. ஆனால் காணாமல் போனவர்களை தேடுவதில் அவர்களது குடும்பத்தினர் கைவிட்டுவிடவில்லை.

இந்நிலையில், மெக்சிகோ அரசு மீண்டும் பாலைவனத்தில் மாயமானவர்களை தேடும் பணியை கையில் எடுத்துள்ளது. இதற்காக ராணுவத்தின் உதவியை நாடி ஹெலிகாப்டர் வழியாக சிஹுவாஹுவான் பாலைவனத்தை நோட்டமிட்டு வருகின்றனர். ஆனால் இதுவரையில் எந்த துப்பும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மெக்சிகோவில் மனிதர்களை கடத்துவது அண்மைக்காலங்களாக அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Also Read: பெர்முடா ட்ரையாங்கிளுக்கு பின்னே இருக்கும் மர்மம் என்ன..? - போட்டு உடைத்த புத்தகம்!