உலகம்

நிகழ்ச்சி மேடையில் கருப்பின ராப் பாடகர் குத்தி கொலை.. அமெரிக்காவில் மீண்டும் மீண்டும் தலைதூக்கும் இனவெறி?

அமெரிக்காவைச் சேர்ந்தவர் டிரேக்கியோ தி ரூலரின். இவர் 2015ம் ஆண்டிலிருந்து ராப் பாடல்களைப் பாடி வருகிறார். இவரின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று டிரேக்கியோவின் இசை நிகழ்ச்சி லாஞ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவரின் ராப் பாடலை கேட்பதற்காக ரசிகர்கள் பலரும் குவிந்தனர்.

இதையடுத்து விழா மேடையின் பின்புறம் டிரேக்கியோவை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் உடனே இசை நிகழ்ச்சி முடித்துக் கொள்ளப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் நிகழ்ச்சி மேடையின் பின்புறம் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி அவரை கொலை செய்தது தெரியவந்தது. அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்துவரும் நிலையில் பிரபல ராப் பாடகர் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: வரி ஏய்ப்பு புகாரிலிருந்து மீளாத உலக அழகி; ஐஸ்வர்யாராயை துரத்தும் அமலாக்கத்துறை