உலகம்
“இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..?” : போலி கையில் தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் பெற முயன்ற நபரால் அதிர்ச்சி!
இத்தாலியில் போலி கையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு சான்றிதழ் பெற முயன்ற சுகாதார ஊழியர் சிக்கியுள்ளார்.
உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு இத்தாலியில் உள்ள பையில்லா பகுதியைச் சேர்ந்த 50 வயது கொண்ட சுகாதாரப் பணியாளர் ஒருவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமில்லாமல் இருந்து வந்துள்ளார்.
ஆனால் அவருக்கு பணிச்சூழல் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே சான்றிதழ் பெற திட்டம் போட்டுள்ளார்.
இதற்காக சிலிக்கான் மோல்டினால் ஆன போலி கையை உருவாக்கியுள்ளார். அதனை தன் கையின் மேல் வைத்துக்கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளச் சென்றுள்ளார்.
தடுப்பூசி போடும் செவிலியர், அவரது கைப்பகுதியில் உள்ள சட்டையை நீக்கிவிட்டு கைகளைத் தொட்டபோது, அவரது தோல் ரப்பரைப் போன்றும், குளிர்ச்சியாகவும் இருந்தை உணர்ந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்து பரிசோதித்ததில் அது சிலிக்கானில் செய்யப்பட்ட போலி கை என்பது தெரியவந்துள்ளது. உண்மையைக் கண்டுபிடித்த பின், வெளியில் சொல்லவேண்டாம் என அந்த நபர் செவிலியரை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் செவிலியர், அந்த நபரின் மோசடி குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டதால் போலி கையில் தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் பெற முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!