உலகம்

வீதியில் உலா வரும் தேள்கள்.. 3 பேர் பலி - 500 பேருக்கு தீவிர சிகிச்சை : அச்சத்தில் எகிப்து மக்கள்!

எகிப்து நாட்டின் தெற்கு அஸ்வான் நகரத்தில் கடந்த வெள்ளியன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மேலும் பல வீடுகள் சேதடைந்துள்ளன.

இந்த மழை காரணமாக தங்களது இருப்பிடத்திலிருந்து தேள்கள் வெளியேறி வீதி வீதியாக உலா வருகின்றன. தேள்கள் கடித்ததில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அசவர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வீட்டிலிருந்து யாரும் வெளியேவர வேண்டாம் என்றும், மரங்கள் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உலகிலேயே எகிப்து நாட்டில் இருக்கும் தேள்களுக்குத்தான் கொடிய விஷம் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிலும் கறுப்பு தேள்கள் கொட்டினால் ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் உயிரிழக்க நேரிடும்.

இதனால் எகிப்து நாட்டில் தேள் கொட்டியதில் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உயிரைப் பணயம் வைத்து ஆடும் இரக்கமற்ற விளையாட்டு - ‘Squid Game’ வெப் சீரிஸ் சொல்வது என்ன?