உலகம்
"உலகைக் காப்பாற்றுங்கள்..." : போப் பிரான்சிஸ் கூறியது என்ன? - உலக நாடுகளின் கவனம் பெறும் Glasgow மாநாடு!
உலகம் முழுவதும் வெள்ளம், கனமழை, பனிப்பாறைகள் உருகுதல், வெப்பம், காட்டுத் தீ என பல்வேறு இயற்கை பேரிடர்கள் வரலாறு காணாத வகையில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால் காலநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என சுவீடன் நாட்டைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா தன்பர்க் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். அண்மையில்கூட உலகத் தலைவர்கள் கால நிலை மாற்றம் குறித்துப் பேச மட்டுமே செய்கிறார்கள் என காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் இன்று தொடங்கி நவம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் அபாயங்களை இனி தடுக்க முடியாது என கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஐபிசிசி அறிக்கை எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்தான முடிவு அந்த மாநாட்டில் என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலேயே இந்த மாநாடு அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கிளாஸ்கோ மாநாட்டின் மூலம் எதிர்கால தலைமுறையினருக்கு உறுதியான நம்பிக்கையை உலக நாடுகளின் தலைவர்கள் ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து போப் பிரான்சில் கூறிய தகவலை இங்கிலாந்து வானொலி நிறுவனம் ஒலிப்பதிவு ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.
அதில், "காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் மற்றும் இயற்கையின் சீரழிவைத் தடுத்து நிறுத்துவதில், நமது கூட்டு முயற்சியின் மூலம் ஒவ்வொரு தனிநபரும் பங்கு வகிக்க முடியும். கடினமான சூழலில் இந்த மாநாடு நடைபெற்றாலும், இந்த மாநாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளும் அதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!