உலகம்

TikTokக்கில் மனித எலும்புகள், மண்டை ஓடுகளை கூவிக் கூவி விற்கும் இளைஞர்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜான் பிச்சாய பெர்ரி. இளைஞரான இவர் TikTokக்கில் மனித எலும்புகளை விற்பனை செய்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இவர் தனது வீட்டில் இறந்த மனிதர்களின் மண்டை ஓடுகள், கை, கால், விரல், இடுப்பு, முதுகெலும்பு என அனைத்துவிதமான எலும்புகளையும் வைத்துள்ளார். இதை தனது TikTokக்கில் மனித உறுப்புகளின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இவரிடம் ரூ.1000த்திலிருந்து ரூ.5 லட்சம் வரையிலான எலும்புகள் விற்பனையில் உள்ளன. மேலும் ஒவ்வொரு எலும்பையும் காட்டி அதுசார்ந்த அறிவியல் விளக்கங்களையும் கூறுகிறார். இளைஞரின் இந்த எலும்பு விற்பனையை பார்ப்பதற்காகவே TikTokக்கில் இவரை 5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இவரது எலும்பு விற்பனையைப் பார்த்து பலர் ஆச்சரியப்பட்டாலும், இப்படி மனித எலும்புகளை விற்பது சட்டத்திற்குட்பட்டதா என்ற கேள்விகளையும் அவர் முன் பலர் வைத்துள்ளனர்.

இதற்குப் பதிலளித்த ஜான் பிச்சாய பெர்ரி "TikTokக்கில் மனித எலும்புகள் விற்பது சட்டவிரோதமானது ஒன்றும் அல்ல.

என்னிடம் மருத்துவர்கள், எலும்பியல் நிபுணர்கள், மருத்துவ மாணவர்கள், கலைஞர்கள் ஆகியோர் எனது வீடியோவை பார்த்து வாங்குகிறார்கள். மேலும் எலும்புகள் குறித்தான அறிவியல் தகவல்களையும் தெரிந்து கொள்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஜான் பிச்சாய பெர்ரிக்கு இவ்வளவு எலும்புகள் எப்படிக் கிடைத்தது என்றும் இந்த விற்பனை குறித்து ஏன் போலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: பெயரை மாற்ற FaceBook முடிவா? : அதிரடி அறிவிப்பை வெளியிடப் போகும் ஃமார்க் - என்ன காரணம்?