உலகம்

பெயரை மாற்ற FaceBook முடிவா? : அதிரடி அறிவிப்பை வெளியிடப் போகும் ஃமார்க் - என்ன காரணம்?

உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பலகோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக ஃபேஸ்புக் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாகத் தொடர்ச்சியாகப் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அப்போது எல்லாம் ஃபேஸ்புக் நிறுவனம் மறுப்பு ஒன்றை மட்டுமே தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கூட ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6 மணி நேரம் முடங்கியது. பின்னர் இந்த பிரச்சனையை ஃபேஸ்புக் சரிசெய்தது. இப்படி முடங்கிய அடுத்த இரண்டு நாளிலேயே மீண்டும் ஒரு மணி நேரம் ஃபேஸ்புக் முடங்கியது. இதனால் ஃபேஸ்புக் பயனாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாலும், ஃபேஸ்புக்கின் பெயரை மாற்ற நிறுவனத்தில் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக திவெர்ஜ் என்ற இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 28ம் தேதி நடைபெறவிருக்கும் ஃபேஸ்புக்கின் வருடாந்திர கான்ஃபரன்ஸில் மார்க் சக்கர்பெர்க் இது குறித்தான அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் தி வெர்ஜ் தெரிவித்துள்ளது. அதேபோல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய பெயரில் ஒரேயொரு மொபைல் ஆப்பில், இன்ஸடாகிராம, வாட்ஸ் ஆப், ஓகலஸ் உள்ளிட்ட தளங்கள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “6 நாளில் 2வது முறையாக நடந்த தவறு.. பயனாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட Facebook” : காரணம் என்ன?