உலகம்

14 கங்காருகள் அடித்துக் கொலை... 2 இளைஞர்கள் கைது : ஆஸ்திரேலியாவில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

ஆஸ்திரேலியா மாகாணத்திற்குட்பட்ட நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கடந்தவார இறுதியில் சாலைகளில் கங்காருகள் இறந்து கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலிஸார் அப்பகுதிக்குச் சென்றனர். அப்போது சாலைகளில் ஆங்காங்கே 14 கங்காருகள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் இரண்டு இளைஞர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதில் வேறு யாருக்குத் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். அதேபோல் கங்காருகள் அடித்து கொலை செய்யப்பட்ட காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து, மனசாட்சி இல்லாமல் தேசிய விளங்கை அடித்துக் கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்நாட்டின பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2019ம் ஆண்டு வாகனம் ஏற்றி 20 கங்காருகள் கொல்லப்பட்டது தொடர்பாக 19 வயது இளைஞர் ஒருவரை போலிஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தாயை சுட்டுக்கொன்ற குழந்தை... தந்தையை கைது செய்த போலிஸ் : ஃப்ளோரிடாவில் நடந்தது என்ன?