உலகம்
“சீன நிறுவனத்தால் தலைகீழாகும் உலகப் பொருளாதாரம்” : எவர்கிராண்ட் நிறுவனத்தால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான லேமென் பிரதர்ஸ் நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு திவால் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வங்கி முறையான கணக்குகள் இன்றி, வீட்டுக் கடன் வழங்கியதே திவால் நிலைமைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அந்த வங்கியின் சரிவைத் தொடர்ந்து பல வங்கிகள் ஆட்டம் கண்டன. இதனால் அமெரிக்க பொருளாதாரம் பெரும் இழப்பைச் சந்தித்தது. இது அமெரிக்கா மட்டுமின்றி, உலகப் பொருளாதாரத்தையும் பின்னுக்குத் தள்ளியது.
அந்தவொரு நிலைமையை மீண்டும் உலக பொருளாதாரம் சந்திக்கப் போகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவிற்கு லேமென் பிரதர்ஸ் நிறுவனம் போல தற்போது சீனாவின் எவர்கிராண்ட் நிறுவனம் திவால் நிலைமையைச் சந்திக்கவுள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 53வது இடத்தில் உள்ளது சீனாவின் ஹுய் கா யான் என்பவரின் எவர்கிராண்ட் நிறுவனம். இந்த நிறுவனம் 1996ல் உருவாக்கப்பட்டு பெரும் செல்வாக்கு பெற்ற நிறுவனமாக உயர்ந்தது. இந்த நிறுவனம் தற்போது சீனாவில் மட்டும் 1,300 கட்டடங்களை கட்ட ஒப்பந்தம் பெற்றுள்ளது.
அதேவேளையில், 22,15,000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று திரும்பச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் 620 கோடி ரூபாய் கடனை முதற்கட்டமாக செலுத்தவேண்டிய கால அவகாசத்தில் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எவர்கிராண்ட் நிறுவனம்.
மேலும் இந்த நிறுவனத்தின் மீது முதலீடு செய்துள்ள எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளனர். இதன் மூலம் வளரும் சந்தைகளை கொண்டுள்ள பிரேசில், ரஸ்யா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் நாணயங்கள் சரிவைச் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!