உலகம்
ஃபேஷன் ஷோவை அரசியல் மேடையாக மாற்றிய இளம் பெண் எம்.பி : அப்படி என்ன செய்துவிட்டார்?
அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியாகக் கருதப்படுவது Met Gala. இந்த நிகழ்ச்சியில் சினிமா, விளையாட்டு என பிரபலமானவர்கள் விதவிதமான ஆடைகளில் கலந்துகொள்வதே இதன் முக்கிய அம்சமாகும்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நியூயார்க் நகரில் திங்களன்று Met Gala ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாடல் அழகிகள், நடிகைகள், டென்னிஸ் விளையாட்டு நட்சத்திரங்கள் என பலரும் தங்களுக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க இளம் எம்.பி.யான அலெக்சாண்ட்ரியா ஓகாசியோ கார்டஸ் (Alexandria Ocasio-Cortez) இந்த ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டார். அவர் அணிந்து வந்த ஆடைதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அவர் அணிந்து வந்த வெள்ளை நிற ஆடையில் 'Tax The Rich' (செல்வந்தர்களுக்கு வரி வதிப்பீர்) என்ற வாசகம் சிகப்பு நிறத்தில் எழுத்து இடம் பெற்றிருந்தது. 'மெட் காலா' ஃபேஷன் ஷோவை தனது அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்ட அலெக்சாண்ட்ரியாவின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அதுவும் பணக்காரர்கள் மட்டுமே அதிகம் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் துணிச்சலுடன் இப்படி ஒரு ஆடையை அணிந்து வந்து அவர் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!