உலகம்
“ஆப்கானிஸ்தான் மக்களை காப்பாற்ற 600 மில்லியன் டாலர் தேவை” - ஐ.நா வேதனை!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை முழுமையாக வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர். இதனால் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இனி தாலிபான்கள் ஆட்சிதான் என அறிவித்து அதற்காக முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் ஹசன் அகுந்த் தற்காலிக பிரதமராகவும், முல்லா கனி துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்காலிக அமைச்சரவையையும் தேர்வு செய்துள்ளனர். இதில் உள்துறை அமைச்சரான சிராஜுதீன் ஹக்கானி ஐ.நா.வால் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் இருக்கிறார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து மருத்துவம், சுகாதாரம், உணவு என அனைத்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "ஆப்கானிஸ்தான் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு உணவு, மருந்து, தண்ணீர், சுகாதார வசதிகள் என அனைத்தும் தேவைப்படுகிறது. கொரோனா மற்றும் வறட்சியாலும் ஆப்கானிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பாதி மக்கள் தொகைக்கு உதவி தேவைப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்காக 600 மில்லியன் டாலர் திரட்ட முயன்று வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!