உலகம்
“உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல்.. இன்றோடு 20 வருடம் ஆகிறது” : 9/11 தாக்குதலில் என்ன நடந்தது?
கடந்த 2001ம் செட்பம்பர் 11ஆம் தேதி ஆண்டு உலக ஊடகங்களின் கவனம் அனைத்தும் அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் பக்கம் திரும்பியது. 1990களில் பிறந்த மக்கள் அதுவரை காணாத ஒரு தாக்குதலை ஊடகங்கள் படம் பிடித்துக் காண்பித்தது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடந்த தாக்குதலை உலகம் ஒருபோதும் மறந்திருக்காது!
உலகின் தூங்கா நகரம் என வருணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் இதே தேதியில் 20 வருடங்களுக்குமுன் 2001, செட்பம்பர் 11ஆம் தேதி, அமெரிக்காவிற்கு சொந்தமான நான்கு சிறிய விமானங்களை தீவிரவாக குழு ஒன்று, ஹைஜாக் செய்தது. அப்படி, ஹைஜாக் செய்யப்பட்ட விமானத்தை தற்கொலைபடை தாக்குதலுக்காக பயன்படுத்தி, ஏவுகணை போல அந்த விமானங்கள் செயல்படுத்தியது அந்த தீவிரவாகக் குழுக்கள்.
முதலில் இரு விமானங்கள் நியூயார்க்கில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தை தாக்கியது. வாஷிங்கடன்னில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான முதல் விமானம், ‘நார்த் டவர்’ என்று சொல்லப்பட்டும் கட்டிடத்தை உள்ளூர் நேரப்படி 8.46 மணியளவில் தாக்கியது.
தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில், வாஷிங்கடன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்ட மற்றொரு விமானம், இரட்டை கோபுரத்தின் ‘சவுத் டவர்’ என்று சொல்லப்பட்டும் இரண்டாவது கட்டிடத்தை உள்ளூர் நேரப்படி, 9.03 மணியளவில் தாக்கியது.
இந்த விமான தாக்குதலில் கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கட்டிடத்தின் மேல் பகுதியில் பலர் சிக்கி வைத்தனர். அதேபோல் புகை நகரம் முழுவதும் சூழந்தது. தாக்குதலின் நிலைமையை உணர்ந்து மீட்பதற்கு அடுத்த 2 மணி நேரத்தில் 110 மாடி கட்டிடம் மடமடவென சரிந்தது.
இந்த சம்பவத்தால் அமெரிக்கா திணறிப் போன வேளையில், சற்று மணி நேர வித்தியாசத்தில் அடுத்த தாக்குதல் நடந்தது. ஆனால், இந்த முறை இரட்டை கோபுரத்தின் மீது அல்ல, 9.37 மணியளில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகனின் மேற்கு பகுதியில் தனது மூன்றாவது விமான தாக்குதலை நடத்தியது அந்த தீவிரவாதக் கும்பல்.
அதனைத் தொடர்ந்து நான்காவது விமானம், பென்னில்சில் வேனியாவில் உள்ள வயல்வெளி ஒன்றில் நொறுங்கி விழுந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் தீவிரவாக குழுக்களிடையே நடந்த சண்டையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் வயல்வெளியில் மோதப்பட்டதாகவும், அந்த விமானம் நாடாளுமன்ற கட்டடமான கேபிட்டலின் மீது மோத திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நான்கு தாக்குதலிலும் 2,977 பேர் உயிரிழந்தனர். இரட்டை கோபுரத்தில் 2606 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் மொத்தம் 125 பேர் கொல்லப்பட்டனர். மேலும் விமானங்களில் இருந்த 246 பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்தனர். மேலும், தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் 300 பேரும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அடங்குவர். இதில் விமானத்தை கடத்தியவர்கள் 19 பேர் சேர்க்கப்படவில்லை.
மேலும் முதல் விமானம் நார்த் டவரில் மோதும்போது, சுமார் 17 ஆயிரத்து 400 பேர் கட்டடத்தில் சிக்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். மேலும், விஷத்தன்மை கொண்ட இடிபாடுகளில் பணியாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின் லேடனின் அல் கய்தா அமைப்புக் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. 19 பேரைக் கொண்டு இந்த தாக்குதலை அல் கொய்தா நடத்தியதாக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபள்யு புஷ் அல் கய்தாவை அழிக்கவும் ஒசாமா பில் லேடனை பிடிக்கவும் ஆப்கானிஸ்தானில் போர் தொடுத்தார். இதற்காக சர்வதேச அளவில் கூட்டணியை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து 11 வருடங்களுக்கு பிறகு ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் கண்டறிந்து கொன்றது அமெரிக்கப்படை. இந்த தாக்குதலுக்கு காலித் ஷேக் முகமது என்ற தீவிரவாதியும் காரணம் என அவரையும் கைது செய்தது அமெரிக்க.
அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் இதை அப்போது அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகித்த புஷ் தான் செய்திருக்கிறார் என்றும் சிலர் குற்றம் சாட்டினர். இத்தகைய கொடூர தாக்குதல் நடந்தது இன்றோடு 20 ஆண்டுகளை கடந்தவிட்டோம். இந்த நாள் அமெரிக்காவின் வரலாற்றின் கருப்பு தினமாகவே மாறிப்போனது. இப்போதும் அந்த கொடூர தாக்குதல் காரணமாக அங்கு பலர் ஏதோ ஒரு வகையில் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உலக நாடுகள் தீவிரவாகத்தை ஒழிக்க ஒருசேர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உலக மக்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!