உலகம்
"பாம்பின் விஷத்திலிருந்து கொரோனாவுக்கு மருந்து" : பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதும் தொற்று உருமாறிக் கொண்டே வருவது மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாகவே இருந்து வருகிறது.
கொரோனா தொற்று குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் பாம்பின் விஷத்திலிருந்து கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து அறிவியில் இதழில் தங்களின் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். 'jararacussu Viper' என்ற ஒருவகை பாம்பின் விஷத்தில் இருக்கும் 'பைப்டைட் ஐ' என்ற மூலக்கூறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குரங்கின் உடலில் செலுத்தி ஆய்வு செய்துள்ளனர்.
இதில், கொரோனா தொற்று பரவுவதை 75% பாம்பின் விஷம் கட்டுப்படுத்தியதை பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து இந்த குழுவின் தலைமை விஞ்ஞானி ரபேல் கைடோ தெரிவித்துள்ளார். தற்போது முதல் கட்ட ஆய்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது என்றும் அடுத்தகட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், jararacussu பாம்பை யாரும் வேட்டையாட வேண்டாம் என்றும் ஆய்வகத்திலிருந்து மட்டுமே கொரோனாவிற்கான மருந்தை உருவாக்க முடியும் என்றும் அடுத்தடுத்த முடிவுகளில் மனிதர்களிடமும் செலுத்தப்பட்டு ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளதாகவும் ரபேல் கைடோ தெரிவித்துள்ளார்
பிரேசிலின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்று ஜரராகசு. இது கடலோர அட்லாண்டிக் காட்டில் வாழ்கிறது. பொலிவியா, பராகுவே மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!