உலகம்
ஆப்கானில் விமானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 3 பேர் - தப்பிக்க முயற்சித்த கால்பந்து வீரர் பலி!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை வெளியேறிவிட்டார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டார்கள்.
இதனால் அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையங்களில் குவிந்தனர். பேருந்தில் ஏறுவதைப் போல, விமானங்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏறி, பறக்கும்போது கீழே விழுந்து உயிரைவிட்ட அவலமும் அறங்கேறியது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த 3 பேர்களில், ஒருவர் ஆப்கன் நாட்டின் தேசியக் கால் பந்து வீரர் ஜக்கி அன்வாரி (19) என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு விளையாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாலிபான்கள் ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனார். ஆனால் மக்கள் செல்வதற்கு விமானங்கள் ஏற்பாடு செய்யவில்லை.
இதனால் கடந்த 16ம் தேதி ஆப்கனின் தேசிய கால்பந்து அணி வீரரான ஜக்கி அன்வாரி மற்றும் அவருடன் சேர்ந்து 2 பேர் அமெரிக்காவின் போயிங் சி-17 விமானத்தில் ஏற முயற்சித்துள்ளார். ஆனால், அவர்களுக்கு விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், விமானத்தின் சக்கரத்தில் ஏறி பயணிக்க முடிவு செய்துள்ளனர்.
அங்கிருந்து விமானம் பறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மூவரும் விழுந்து உயிரிழந்தனர். இப்படிப்பட்ட சூழலில் இதுபோன்ற செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. மேலும் மற்ற இருவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கிச் சுட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டில் இருந்து வரும் செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!