உலகம்

4 நாட்களில் வேலையை காட்டிய தாலிபான்கள்: என்னவெல்லாம் நடக்குமோ என செய்வதறியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள்!

தாலிபான்களால் ஆப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு கைப்பற்றப்பட்டதால் அங்கு மனித உரிமைகள் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும் என அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

அமெரிக்க படைகள் திரும்பிச் சென்றதை அடுத்து ஒட்டுமொத்த ஆப்கனையும் வளைத்துப்போட்டிருக்கிறார்கள் தாலிபான்கள்கள். இதனால் எப்படியாவது நாட்டை விட்டுச் சென்றிட வேண்டும் என எண்ணி காபூல் விமான நிலையத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் அனைத்து எல்லைகளும் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளன. ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து ஆப்கான் குடிமக்களும் எங்களது சகோதரர்கள்தான். அச்சமின்றி அவர்கள் வாழ்க்கையைத் தொடரலாம். ஷரியத் சட்டப்படி அனைவருக்கும் உரிமைகள் வழங்கப்படும். கடந்த 20 ஆண்டு அனுபவங்கள் மூலம் தாலிபான்கள் பெருமளவுக்கு மாறியுள்ளனர். ஆப்கான் மண் தீவிரவாதத்துக்குப் பயன்படுத்தப்படாது.

Also Read: ஷூ’வையே போடவிடல.. இதுல எங்க இருந்து? ஆப்கனில் இருந்து தப்பியது ஏன் என விளக்கிய அஷ்ரப் கனி!

மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றெல்லாம் தாலிபான்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தனர். ஆனால் நிலைமை என்னவோ அவர்கள் கூற்றுக்கு மாறாகவே உள்ளது. என்னவெனில், தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கன் சென்ற இந்த நான்கே நாட்களில் அங்கு விலைவாசி 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. பகலான் - இ - மர்காஸ் மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே தாலிபன்கள் வசம் சென்றிருந்தாலும் அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு ஒட்டுமொத்த நாட்டையும் வசப்படுத்தியதும் தங்களது வேலையை காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவ்வகையில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இயல்பு நிலை திரும்பி இருந்தாலும் விலைவாசி என்னவோ விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. அதன்படி, பகலான் மாநிலத்தில் மளிகை, காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை ஏகபோகமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான வழிகளும் அடைக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் நாட்களில் உணவு தட்டுப்பாடும் நிகழலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Also Read: ஆப்கனில் உட்புகுந்த தாலிபன்கள்; இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்த பாதாம், பிஸ்தாக்களின் விலை.. காரணம் என்ன?