உலகம்
“உலகில் நிகழும் குழப்பம், சிக்கல்களால் கொரோனா முடிவுக்கு வர இன்னும் நீண்ட காலம் ஆகும்” : WHO எச்சரிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்றளவில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.72 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால், 29 லட்சத்து 58 ஆயிரத்து 236 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது, கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான நடவடிக்கைகள் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள் மற்றும் சிகிச்சையின் போது ஏற்படும் சிக்கல்களை பார்க்கும்போது, கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம் என தோன்றுகிறது என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசிஸ் கூறுகையில், “பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது. தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் திடமாக நம்புகின்றனர். ஆனால் அது தவறு என்பதை உணரவேண்டும்.
மேலும், கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள் மற்றும் சிகிச்சையின் போது ஏற்படும் சிக்கல்களை பார்க்கும்போது, கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம் என தோன்றுகிறது பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!