உலகம்

அடுத்தடுத்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டபாதையில் நுழைந்த இரு விண்கலன்கள்- என்ன நடக்கிறது விண்வெளியில்?

ஐக்கிய அரபு அமீரகத்தின் HOPE விண்கலம் நேற்று செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையை அடைந்த நிலையில், சீனாவின் TIANWEN 1 ன் விண்கலமும் இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்துள்ளது.

சீனாவின் TIANWEN 1 ன் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதவம் ஹெய்னான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு ரஷ்யாவின் ராக்கெட்டிலிருந்து யிங்ஹுவோ-1 என்ற பெயரில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியது. ஆனால், அந்த விண்கலம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து 2வது முயற்சியாகTIANWEN 1 ன் விண்கலம் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்துள்ளது.

இந்த விண்கலம் மே அல்லது ஜூன் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்படப்பட்டுள்ளது. அப்படி வெற்றிகரமாக தரையிறங்கினால் அமெரிக்காவிற்கு அடுத்து சீனாதான் செவ்வாய் கிரகத்தில் 2வதாக விண்கலத்தை தரையிரக்கியது என்ற பெருமையை பெரும். சீனாவின் இந்த விண்கலம் நிலம், மண், சுற்றுச்சூழல், நீர்வளங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தைச் செலுத்திய பெருமை இந்தியாவிற்கு உண்டு. இந்தியா தனது முதல் முயற்சியிலேயே மங்கள்யான் விண்கலத்தை 2014ம் ஆண்டு செலுத்தி இந்தப் பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.