உலகம்

“தன் பாலினத்தவர்கள் குடும்பமாக வாழ்வதற்கு உரிமை கொண்டவர்கள்” : போப் பிரான்சிஸ் கருத்து !

பல நாடுகளில் தன் பாலின உறவு அங்கிகரிக்கப்படுள்ளனர். சில நாடுகளில் தடை தொடர்கின்றனர். இன்றளவும் பலரும் தன் பாலினத்தவர்களுக்கு தங்களின் ஆதரவுகளை தொடர்ந்துத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஐ.நா சபை தன் பாலின உறவு குற்றமல்ல; தன் பாலினத்தவர்கள் வாழ்வதற்கு உரிமை உள்ளது. இயற்கைக்கு எதிராக யாரும் செயல்பட முடியாது. எனவே அனைவரும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என முன்னதாக வலியுறுத்தியது.

இந்தியாவிலும் கூட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, தன் பாலினத்தவர் உறவுக்கு குற்றமல்ல; திருமனத்திற்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தன் பாலித்தவர்களுக்கு போப் பிரான்சிஸ் ஆதரவு அளித்துள்ளார்.

நேற்றைய தினம் அஃபினீவ்ஸ்கை இயக்கிய பிரான்செஸ்கோ என்ற ஒரு ஆவணப்படம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது இந்த திரைப்பட விழாவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தன் பாலினத்தவர்கள் ஒரே குடும்பமாக வாழ்வதற்கு அனைத்து வகையான உரிமையும் உள்ளது. அவர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள். அவர்களை ஒருபோதும், வெளியேற்ற கூடாது; அதற்கான உரிமை யாருக்கும் இல்லை.

ஒரே பாலித்தவர்களை சட்டம் அங்கீகரிக்கும் வகையில், அனைத்து நாடுகளிலும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அதற்காக நான் போராடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தன் பாலினத்தவர்களுக்கு ஆதரவாக அவர்களுக்கென சட்ட அங்கீகாரம் வழங்க சட்டம் தேவை என போப் பிரான்சிஸ் அவர்களே முதன் முதலில் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ரூ.1.44 கோடி எப்படி போதும்?” : குறைவான சம்பளத்தால் அதிருப்தி... பதவியை ராஜினாமா செய்கிறாரா பிரதமர்?