உலகம்
கோடிக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றிய 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!
2020ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பிரிட்டன், அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு இந்த விருதை நேற்றைய தினம் அறிவித்தது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும் மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல் கட்டமாக மருத்துவத்துக்கான 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பிரிட்டன், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க விஞ்ஞானி ஹார்வே ஜே.ஆல்டர் (வைராலஜிஸ்ட்), பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன், அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் எம். ரைஸ் (பேராசிரியர் ராக்கர் ஃபெல்லர் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் செல்களை அழித்தல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ரத்தத்தில் பரவும் ஹெபாடைடிஸ் வைரசுக்கு எதிராக கண்டுபிடிப்புகளைச் செய்தமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த 3 விஞ்ஞானிகளும் ஏற்கெனவே ஹெபாடைடிஸ் ஏ, பி வைரஸ்களையும் கண்டுபிடித்திருந்தனர். இதுதான் ஹெபாடைடிஸ்- சி வைரஸ் ஆய்வுக்கான முதல் படியாக அமைந்தது. இந்த ஹெபாடைடிஸ்- சி வைரஸ் கண்டுபிடிப்பின் மூலம் நாள்பட்ட ஹெபாடைடிஸ் ஏற்படுவதற்கான காரணத்தை ரத்தப்பரிசோதனைகள் மூலம் கண்டறிய உதவின.
கோடிக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்ற புதிய மருந்துகள் கண்டுபிடிப்பையும் சாத்தியமாக்கியது. இதன் மூலம் வரலாற்றிலேயே முதல் முறையாக, ஹெபாடைடிஸ்- சி வைரஸை இப்போதுதான் குணப்படுத்த முடிகிறது.
இவர்களின் கண்டுபிடிப்புகள் நாள்பட்ட ஹெபாடைடிஸ் ஏற்படுவதற்கான காரணத்தை ரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய உதவின. கோடிக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்ற புதிய மருந்துகள் கண்டுபிடிப்பையும் சாத்தியமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!