உலகம்
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை: தோல்வி பயத்தால் அராஜக போக்கை கையாளும் டிரம்ப்!
கொரோனா வைரஸ் பாதிப்பால், மாறிவரும் சர்வதேச அரசியல் சூழலில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு பெரும் அதிர்ச்சியை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலுக்குப் முன்பே, மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்படும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு கொரோனாவுக்கு பின்னர் இன்னும் தீவிரமானது. குறிப்பாக கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதனால், கோவமடைந்த சீனா ஹாங்காங் பாதுகாப்புச் சட்டம் தைவான் மற்றும் தென் சீனக்கடல் பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அமெரிக்காவை சீனா கடுமையாக எதிர்பதன் விளைவாக, சீன அதிகாரிகள், தலைவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு அமெரிக்காவில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டுவந்தது.
பதிலுக்கு அமெரிக்கப் பொருட்கள் தொடங்கி அமெரிக்கா மீது சீனா பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. இதனால் அமெரிக்காவின், ஹூஸ்டனில் இருந்த சீனத் துணைத் தூதரகத்தையும் மூட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இந்த மோதல்ப் போக்கு மத்தியில், இரண்டாம் உலகப் போர் பின்னால் உலக அமைதியை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை தனது 75 ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. முன்னதாக நடைபெற்ற ஐ.நா சபைக் கூட்டத்திலும் தங்கள் மோதல்களை அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்தனர்.
ஐ.நா சபைக் கூட்டம் முதல் முறையாக இணைய வழியே நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அமெரிக்காவும் சீனாவும் பகிரங்கமாக மோதிக்கொண்டனர். இன்று உலகையே முடக்கிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவை பொறுப்பாளியாக்கவேண்டுமென்று அமெரிக்கா குற்றம் சாட்டியது
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங் உரையின் போது, ஐ.நா வரை டிரம்ப் தமது அரசியல் வைரஸை பரப்புவதாகவும், உலக நடப்புகளில் ஒரு நாடு ஆதிக்கம் செலுத்துவதையும், பிற நாடுகளை கட்டுப்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என்றும் அமெரிக்காவை ஜின்பிங் மறைமுகமாக சாடினார்.
இந்நிலையில், அமெரிக்கா-சீனா இடையிலான வார்த்தைப் போர் புதிய பனிப்போருக்கு வழிவகுத்து விடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. இந்த வார்த்தை போரை தற்காலிகமாக நிறுத்திவைத்த ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனியோ, திய பனிப்போர் உருவாகுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு கொரோனாவை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிலையில், ஒருவாரத்திற்கு பிறகு தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அமெரிக்கா ஒரு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்து அமெரிக்க அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக,புதிய கொள்கை அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் குடியுரிமை பெறவேண்டும் என்றால், அதில், எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது அதன் தொடர்புடைய அமைப்பிலோ உறுப்பினராக இருக்க கூடாது. ஏன் உறுப்பினாராக இல்லாவிட்டலும் அந்த கட்சியுடன் தொடர்பில் இருந்தால் கூட அமெரிக்கா குடியுரிமை பெற முடியாது என குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவில் குடியுரிமை பெறுவற்காக ஏற்பட்டத்தப்பட்ட நிபந்தனைகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு ஒத்துப்போகததால் இத்தக்கைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் குடியுரிமை வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு இருதரப்பு மோதலின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் தோல்வி பயத்தால் அதிபர் டொனால்டு டிரம்ப் இத்தகைய அராஜகத்தை கையாளுவதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!