உலகம்

‘ட்ரம்ப் அமெரிக்காவின் தவறான அதிபர்’ - மிஷெல் ஒபாமா காட்டம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவியான மிஷெல் ஒபாமா, டொனால்ட் ட்ரம்பை அவர்களுடைய நாட்டின் தவறான அதிபர் என விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடேன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஜோ பிடேனுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் நடத்திய கூட்டத்தில் மிஷெல் ஒபாமா கடுமையாக ட்ரம்பை விமர்சித்துப் பேசினார். அமெரிக்க மக்கள் ட்ரம்பின் பிரிவினை அரசியலைப் புறந்தள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

டிரம்பை எதிர்த்து போட்டியிடும் அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன்.

“டொனால்ட் ட்ரம்ப் நம் நாட்டின் தவறான அதிபர். ஒரு தலைமையை அல்லது ஆற்றுப்படுத்தலை அல்லது நிலைமாறாத் தன்மையின் ஏதோ ஒரு சாயலை எதிர்பார்த்து நாம் வெள்ளை மாளிகையை நோக்கும்போது நமக்கு கிடைப்பதெல்லாம் பேரழிவு, பிரிவினை மற்றும் முழுக்க முழுக்க புரிந்துணர்வு இல்லாத உணர்வுதான் கிடைக்கிறது.” என மிஷெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவரை முன்னாள் அதிபரின் மனைவி விமர்சித்தது இதுவே முதல் முறை. ட்ரம்பை தகுதி, குணம் மற்றும் அதிபர் பதவிக்கேற்ற பண்பார்ந்த தன்மை என எதுவும் இல்லாதவர் எனவும் மிஷெல் ஒபாமா விமர்சித்துள்ளார்.

Also Read: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளராவதற்குக் குவியும் ஆதரவு!